உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

சமயப் பிளவுகளும் அக்காலத்தில் ஏற்படவில்லை. நாயன்மார்கள் சிவனின் சக்தியை (அம்மையை)த் தம் பாடல்களில் பாடியபோதிலும் அந்த அம்மைக்குத் தனியே கோயில்கள் ஏற்படவில்லை. சைவம் வைணவம் என்னும் பெயர்கள் இருந்தபோதிலும், அக்காலத்தில் இரண்டு சமயமும் ஒரு சமயமாகவே, வேற்றுமை இன்றிக் கருதப்பட்டன. நாயன்மார்கள் ஆழ்வார்கள் காலத்துக்குப் பிறகு, சைவசித்தாந்தம் என்றும் வைணவ விசிஷ்டாத்வைதம் என்றும் தத்துவ சாத்திரங்கள் எழுதப்பட்ட பிறகு, சைவ சமயமும் வைணவ சமயமும் தனித்தனியே பிரிந்துவிட்டது மட்டுமன்றிப், பிற்காலத்தில் இரண்டு சமயங்களும் ஒன்றோடொன்று போராடிக் கொண்டன.

6

சைவமும் வைணவமும் வெவ்வேறாகப் பிரிந்துவிட்ட பிறகுதான், ஏறக்குறைய கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு, சிவன் கோயில்களிலே தனியாக அம்மன் சந்நிதி கட்டத் தொடங்கினார்கள். இந்த உண்மை கல்வெட்டுச் சாசன ஆராய்ச்சியினாலும் விளங்குகிறது. இதற்குச்சான்று காட்டி எழுதுவதற்கு இஃது இடமன்று. சைவமும் வைணவமும் தனித்தனியே வெவ்வேறு மதங்களாகப் பிரிந்து போவதற்கு முன்பு (ஏறக்குறைய கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்கு முன்பு) சிவன் வழிபாடும் திருமால் வழிபாடும் பெரும்பாலும் ஒரே கோயிலில் நிகழ்ந்துவந்தன.

திருநாவுக்கரசர் காலத்தில் சைவம் வைணவம் என்னும் வேறுபாடு அதிகமாகக் காணப்படவில்லை. சிவபெருமான் திருமாலின் ஒரு பகுதியாகவும் திருமால் சிவபெருமானின் ஒரு பகுதியாகவும் இருவரும் ஒருவராக, சக்தியும்சிவமுமாக, அரிஹர மூர்த்தியாக-, வழிபடப்பட்டனர். திருநாவுக்கரசர் தம் தேவாரப் பாடல்களில் இதனைப் பல இடங்களில் குறிப்பிடுகிறார் :

"காவியங் கண்ண ளாகிக் கடல்வண்ண னாகி நின்ற தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற் றூர னாரே. 'மாலொரு பாக மாக மகிழ்ந்தநெய்த் தான னாரே. 'அரியலால் தேவி யில்லை ஐயன்ஐ யாற னார்க்கே.

66

66

99

99

"மண்ணினை யுண்ட மாயன் றன்னையோர் பாகங் கொண்டார்.’ 'நாரணனை யிடப்பாகத் தடைத்தார் போலும்.

66