உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

நேரிசை வெண்பா

எனதே கலைவளையும் என்னதே மன்னர்

சினவேறு செந்தனிக்கோல் நந்தி - இன்வேழங் கோமறுகிற் சீறிக் குருக்கோட்டை வென்றாடும்

பூமறுகிற் போகாப் பொழுது.

2

கட்டளைக் கலித்துறை

பொழுதுகண் டாயதிர் கின்றது போகநம் பொய்யற்கென்றும் தொழுதுகொண் டேனென்று சொல்லுகண் டாய்தொல்லை நூல்வரம்பு முழுதுகண் டானந்தி மல்லையங் கானல் முதல்வனுக்குப் பழுதுகண் டாயிதைப் போய்ப்பகர் வாய்சிறைப் பைங்குருகே. குறிப்பு:- நந்திவர்மன் பழைய நூல்களை யெல்லாம் கற்றவன் என்று இதில் கூறப்படுவது காண்க.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்ம்

குருகுதிர்முன் பனிக்கொதுங்கிக் கூசுங் கங்குல்

குளிர்திவலை தோய்ந்தெழுந்த நறுந்தண் வாடை

யருகுபனி சிதறவர அஞ்சு வாளை

யஞ்சலஞ்சல் என்றுரைத்தா லழிவ துண்டோ?

திருகுசினக் கடக்களிற்றுச் செங்கோல் நந்தி

தென்னவர்கோன் தன்குறும்பிற் சென்று சூழ்ந்த

கரிகைவினைப் பகைஞருடல் துண்ட மாகத்

துயிலுணர்ந்த வல்லண்மைத் தொண்டர் வேந்தே.

3

4

குறிப்பு: இதில், நந்திவர்மனுடைய பகைவனான பாண்டியனை யும் அவனைச் சார்ந்திருந்த அரசர்களையும் நந்தி வென்ற செய்தி கூறப்படுகிறது.

அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

தொண்டை வேந்தன் சோணாடன் தொன்னீ ரலங்கல் முந்நீருங் கொண்ட வேந்தர் கோனந்தி கொற்ற வாயில் முற்றத்தே விண்ட வேந்தர் தந்நாடும் வீரத் திருவும் எங்கோனைக்

கண்ட வேந்தர் கொண்மின்க ளென்னுங் கன்னிக் கடுவாயே.