உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கடுவா யிரட்ட வளைவிம்ம மன்னர்

கழல்சூட வங்கண் மறுகே

யடுவார் மருப்பி னயிரா வதத்தின்

அடுபோர் செய் நந்தி வருமே கொடுவார் புனைந்து நகுவாட் படைக்கண்

மடவா ரிடைக்குண் மனமே வடுவா யிருக்கு மகளேயி முன்றின்

மணியூசல் ஆடல் மறவே.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மறமத கரிதிசை நிறுவின

மணிநகை யவர்மனம் நகுவன

விறலர சர்கண்மன நெகிழ்வன

விரைமலர் களிமுலை பொருவன

திறலுடை யனதொடை புகழ்வன

திகழொளி யன்புகழ் ததைவன

நறுமலர் அணியணி முடியன

நயபுர நினதிருப் புயமதே.

375

6

7

இதில், நயபரன் என்பது நந்திவர்மனுடைய சிறப்புப் பெயர்களில் ஒன்றாகக் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

கலி விருத்தம்

புயங்களிற் பூவைமார் பொங்கு கொங்கையின் நயங்கொளத் தகுபுகழ் நந்தி கச்சி சூழ் கயங்களிற் கடிமலர் துழாவிக் காமுகர்

பயங்கொளப் புகுந்தது பருவ வாடையே.

00