உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

ஷ வேறு

செங்கோல் வளைக்கை யிவளுந் துவண்டு

செறியாமை வாட வெழிலார்

அங்கோல் வளைக்கை யிளையா ரிழப்ப

அரசாள்வ தென்ன வகையோ

தங்கோல் வளைத்த திகழ் சேரர் சோழர் தமிழ் மன்னர் நின்ற நிலமேல் வெங்கோ னிமிர்த்த வரையுஞ் சிவந்த

விறல் நந்தி மேன்மொழி வையே..

கலிநிலைத் துறை

மொழியார் தொண்டைப் பன்மலர் முற்றுந் தெருவந்து விழியா ளென்றும் மேனி வெளுத்துற மெலிரவாளே யொழியா வண்கைத் தண்ணருள் நந்தி தனூர்மட்டோ வழியாந் தமரக் கடல்வட் டத்தொரு வண்கோவே.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஒருகோமகன் நந்தி யுறந்தையர் கோன்

உயர்நீள்வல யத்துயர் வாளைவளை

குருகோடு வயற்படர் காவிரியின்

குலவும்புயல் கண்டு புகார்மணலிற்

பெருகோடு நெடுங்கழி சூழ்மயிலைப் பெருமானது பேரணி நீண்முடிமேற் றருகோதை நினைந்தயர் வேன்மெலியத் தழல்வீசுவ தோகுளிர் மாமதியே.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மதிய மெரிசொரியு மாலையம் மாலை மறந்தும் புலராது கங்குலெலாங் கங்குல் கதிர்செயணிவண்டு காந்தாரம் பாடக்

களிவண்டு புகுந்துலவுங் காலமாங் காலம்

385

42

43

44