உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

66

'அப்போது வந்துண்டீர்களுக் கழையாது முன்னிருந்தேன் எப்போதும் வந்துண்டால் எமைஎமர்கள் சுழியாரோ இப்போதுமக் கிதுவே தொழிலென் றோடியக் கிளியைச் செப்பேந் திளமுளையாள் எறி சீபர்ப்பத மலையே'

409

மகோதைப் பட்டினம் என்னும் கொடுங்கோளுர் மலையாள நாட்டுக் கடற்கரையில் இருக்கிறது. மகோதையை அடுத்த அஞ்சைக் களத்தப்பன் கோயிலுக்குச் சென்ற சுந்தரர் கடற்கரைக்குச் சென்று கடற் காட்சியையும் அருகில் உள்ள தோட்டங்களின் காட்சியையும் கண்டார். கண்டு, அக்காட்சியைச் சொல் ஓவியமாகத் தீட்டுகிறார்.

66

'மலைக்குநிகர் ஒப்பன வன்திரைகள்

வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்டு

அலைக்குங் கடலங்கரைமேல் மகோதை அணியார் பொழில் அஞ்சைக்களத் தப்பனே

“மழைக்கு நிகர்ஒப்பன வன்திரைகள்

வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்டு அழைக்குங் கடலங்கரைமேல் மகோதை அணியார் பொழில் அஞ்சைக்களத் தப்பனே “உரவத்தொடு சங்கமோடிப்பி முத்தங்கொணர்ந் தெற்றி முழங்கி வலம்புரி கொண்டு அரவக் கடலங்கரைமேல் மகோதை அணியார் பொழில் அஞ்சைக்களத் தப்பனே

“நோக்கு நிதியம் பல எத்தனையும் கலத்தில் புகப்பெய்து கொண்டேற நுந்தி

66

ஆர்க்குங் கடலங்கரைமேல் மகோதை

அணியார் பொழில் அஞ்சைக்களத் தப்பனே

99

99

'வடிக்கின்ற போல்சில வன்றிரைகள்

வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்

டடிக்குங் கடலங்கரைமேல் மகோதை

அணியார் பொழில் அஞ்சைக்களத்தப்பனே

அடர்ந்த பனந்தோப்புகளும் தென்னந் தோப்புகளும் தூரப் பார்வைக்கு வெகு அழகான காட்சியாகும். இயற்கைக் காட்சியில்