உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

மனத்தைச் செலுத்துவோருக்கு இக்காட்சிகள் கண்ணுக்கினிய தோற்றம் அளிப்பன. சுந்தரர் இக்காட்சிகளைக் கானாட்டு முள்ளூரிலும், கடற் கரையையடுத்த திருமறைக் காட்டிலும் கண்டு மகிழ்ந்தார். மகிழ்ந்து சொல்லோவியம் வரைந்து காட்டுகிறார்.

66

66

கருக்குவாய்ப் பெண்ணையொடு தெங்குமலி சோலைக்

கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே

""

'தெங்கங்களும் நெடும்பெண்ணையும் பழம்விழ் மணற்படப்பைச் சங்கங்களும் இலங்கிப்பியும் வலம்புரிகளும் இடறி வங்கங்களும் உயர்கூம்பொடு வணங்கும் மறைக்காடே

சுந்தரர் நம்மை இன்னொரு தோப்புக்கு அழைத்துக் கொண்டு போகிறார். அத்தோப்பு வெஞ்சமாக்கூடல் என்னும் ஊரில் இருக்கிறது. அங்கு ஒருபுறம் கமுகம் தோப்பு. பாக்கு மரங்கள் வரிசை வரிசையாக உயர்ந்து வளர்ந்து குலைகளைத் தாங்கியுள்ளன. அதற்கருகில் அடர்ந்து உயர்ந்த தென்னந்தோப்பு. அதற்குப் பக்கத்தில் பெரிய பலாத்தோப்பு. இயற்கைக் காட்சியில் திளைக்கும் மனமுடையவர் இவற்றைக் கண்டு மகிழுங்கள்.

66

"நிரையார் கமுகும் நெடுந்தாள் தெங்கும்

குறுந்தாள் பலவும் விரவிக் குளிரும்

விரையார் பொழில்சூழ் வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே."

என்று படம் வரைந்து காட்டுகிறார்.

இதோ குரங்குகளின் காட்சியைக் காணுங்கள். வாழைத் தோப்பில் வாழைப்பழம் குரங்குக்குக் கிடைத்தது. ஒருவரும் இல்லாத அமைதியான இடத்தில் தின்ன விரும்பி, தாழைப் புதரின்கீழ் சென்று அமர்ந்து தின்கின்றது. இக்காட்சியைத் திருமறைக் காட்டில் கண்டார்.

66

"தாழைப்பொழில் ஊடேசென்று புழைத்தலை நுழைந்து

வாழைக்கனி கூழைக் குரங்குண்ணும் மறைக்காடே

திருவாஞ்சியம் என்னும் ஊர். அங்குக் குரங்குகள் கூடி வாழைப் பழத்தையும் பலாச் சுளைகளையும் கொண்டு வந்து பங்கு போட்டுக் கொண்டன. பிறகு, அவைகள் என் கூறு சிறிது என் கூறு சிறிது என்று சண்டை செய்து வாழை மட்டையினால் அடித்துக் கொண்டனவாம்.