உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. செந்தமிழ்ச் சிந்தாமணி*

கால ஆராய்ச்சி

சிந்தாமணி இயற்றப்பட்ட காலத்தைக் கண்டறிவதற்கு அக் காவியத்திலே சான்று கிடைக்கவில்லை. திருத்தக்க தேவரைப் பற்றிய வரலாறும் தெரியவில்லை. ஆகவே, இந்நூலின் காலத்தைக் கண்டறி வது கடினமாய் இருக்கிறது. கடினமாய் இருந்தாலும், இந்நூலின் காலத்தை அறிவது தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு இன்றியமையா ததாகும். ஆகவே, இதன் காலத்தைக் கண்டறிய முயல்வோம்:

முதலில் ஓர் ஐயத்தை நீக்கிக்கொள்ள வேண்டும்: இந்தக் காவியத்திலே பல்லவ நாடு கூறப்படுகிறபடியினாலே, பல்லவ அரசர் காலத்திலே இயற்றப்பட்டது இந்நூல் என்று சிலர் கருதுகின்றனர்; எழுதியும் வருகின்றனர். பல்லவ தேசம் என்று சிந்தாமணியில் கூறப் படுவது, தமிழ்நாட்டிலிருந்த பல்லவதேசம், தொண்டைமண்டலம் அன்று; வேறு நாடு.

66

“படுமழை பருவம் பொய்யாப் பல்லவ தேயம் என்னும் தடமலர்க் குவளைப் பட்டந் தழுவிய யாணர் நன்னாடு.

“வெல்களிற் றச்ச நீக்கி விரைவொடு வனத்தி னேகிப் பல்லவ தேயம் நண்ணி’

66

"கோங்குபூத் துதிர்ந்த குன்றிற்

பொன்னணி புளகம் வேய்ந்த

பரங்கமை பரும யானைப்

99

அதாவது

1185

1754

பல்லவ தேச மன்னர்”

2253

66

“பாகத்தைப் படாத நெஞ்சிற் பல்லவ தேய மன்னன் சேவகன் சிங்க நாதன் செருக்களம் குறுகி னானே.

99

2278

என்று பல்லவ நாடு சிந்தாமணியில் கூறப்படுகிறது. பல்லவ நாட்டரசன் மகளைச் சீவகன் மணந்தான் என்றும், சீவகன் கட்டியங்காரனுடன் செய்த * சீவக சிந்தாமணி சொற்பொழிவு நினைவு மலர். ஜைனத் தமிழ் இலக்கிய மன்றம் - காஞ்சிபுரம் (1932)