உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

காட்டியிருக்கிறார். அமிதசாகரர் இயற்றிய யாப்பருங்ஙகலம் என்னும் நூலிலிருந்தும் மேற்கோள் காட்டியிருக்கிறார்; யாப்பருங்கலத்தி லிருந்து, “மாலை மாற்றே சக்கரம் சுழிகுளம்” என்னும் தொடக்கத்துச் சூத்திரத்தை மேற்கோள் காட்டி, என்று அமிதசாகரனார் கூறியன கொள்க, என்று எழுதுகிறார். அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங் கலத்தை இவர் மேற்கோள் காட்டுகிறபடியினாலே, யாப்பருங்கலம் வீரசோழியத்திற்கு முற்பட்ட நூல் என்பது தெரிகிறது. யாப்பருங்கலம், வீர சோழியத்திற்கு முற்பட்ட நூல் என்றால் குறைந்தது ஒரு நூற்றாண் டிற்கு முற்பட்ட நூலாக இருக்க வேண்டும். என்னை? அக்காலத்தில் நூல்கள் நாட்டில் செல்வாக்குப் பெறுவதற்கு அதிக காலம் செல்லும் ஆகலின் என்க. ஆராய்ச்சியாளரும் இதனையே கூறுவர். யாப்பருங் கலம் முதலாம் ராஜாராஜன் காலத்தில் இயற்றப்பட்டது என்பர். முதலாம் ராஜராஜன் கி.பி. 985 முதல் 1013 வரையில் அரசாண்ட சோழ மன்னன் ஆவன். வன். இந்த அரசன் காலத்திலேதான் அமிதசாகரனார், யாப்பருங்கலம் என்னும் செய்யுள் இலக்கண நூலை இயற்றினார் என்பர்.1 எனவே, யாப்பருங் கலம் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூல் ஆகும்.

யாப்பருங்கலம் இயற்றிய அமிதசாகரரும், அதற்கு உரை எழுதிய குணசாகரரும் சமகாலத்தவர் ஆவர். யாப்பருங்கல உரை யிலே, உரையாசிரியர் சிந்தாமணி, சூளாமணி, நீலகேசி, குண்டலகேசி, வளையாபதி முதலிய நூல்களிலிருந்து பல விருத்தப்பாக்களை மேற்கோள் காட்டுகிறார். மேற்கோள் காட்டப்பட்ட இந்த நூல்கள். இவர் காலத்திற்கு முற்பட்டனவாதல் வேண்டும்; குறைந்தது ஒரு நூற்றாண் டிற்கு முற்பட்டனவாதல் வேண்டும். யாப்பருங்கலம், கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தாகலின், அதில் மேற்கோள் காட்டப்பட்ட இந்த நூல்கள், கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் இயற்றப்ட்டனவாதல் வேண்டும்.

விருத்த யாப்பால் இயற்றப்பட்ட நீலகேசி, குண்டலகேசி, வளை யாபதி, சூளாமணி ஆகிய நூல்களுக்குக் காலத்தினால் முந்தியது சிந்தா மணி ஆகும். என்னை? முதன்முதல் விருத்த யாப்பினால் இயற்றப் பட்ட காவியம் சிந்தாமணி என்று கூறப்படுகிறதாகலின். சங்க காலத்தில்,

1. Amitasagaranar - By M. Raghava Ayyangar, Journal of Indian History, Vol. V.

PP. 204 - 209.