உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

-

421

விருத்த யாப்பினால் நூல்கள் இயற்றப்படவில்லை. சங்க காலத்திற்கப் பிறகு - அதாவது கி.பி. 3-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழில் விருத்தப் பாக்கள் அமைப்பதற்கும், அவற்றிற்குச் செய்யுள் இலக் கணம் அமைப்பதற்கும், இப்பாக்களைப் புலவர் உலகம் ஒப்புக் கொள் வதற்கும் சில நூற்றாண்டுகள் சென்றிருக்க வேண்டும். விருத்தப் பாக்கள் தமிழில் திடீரென்று ஒரேநாளில் தோன்றிவிடவில்லை. வடமொழி முறையையும் தமிழ்மொழி முறையையும் நன்கறிந்து புதியனவாக விருத்தப் பாக்களைத் தமிழில் அமைத்தவர் சமணரும் பௌத்தரும் ஆவர். இவ்விருத்தப்பாக்கள், பல திருத்தங்களைப் பெற்றுத் திருந்திய அமைப்புப் பெறுவதற்கும் புலவர் உலகம் இவற்றை ஏற்றுக்கொண்டு நடைமுறையில் வழங்குவதற்கும் சில நூற்ாண்டு வேண்டும். முதல் முதல் விருத்த யாப்பில் இயற்றப்பட்ட பெருங் காவியம் சிந்தாமணியே என்று கூறுப்படுகிறது. இதற்குச் சிந்தாமணியில் அகச்சான்றும் காணப்படுகிறது. என்னை? சிந்தாமணியின் விருத்த யாப்பு இடையிடையே தடைபடுகிறதை யாப்பிலக்கணம் அறிந்த அறிஞர் அறிவர். முதன்முதல் விருத்த யாப்பினால் செய்யப்பட்ட காவியம் சிந்தாமணி என்பதற்கு இதுவே சான்றாகும். சூளாமணி, குண்டலகேசி, வளையாபதி முதலிய நூல்கள் கி.பி. 9-ஆம் நூற்றாண் டில் இயற்றப்பட்டன என்று மேலே கூறினோம். ஆகவே, அவற்றிற் கெல்லாம் முற்பட்ட சிந்தாமணி, முதன்முதல் விருத்தயாப்பில் இயற்றப் பட்ட நூலாதலின், அந்நூல்களுக்கு முந்திய நூற்றாண்டில், அதாவது கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதெனக் கொள்ளலாம்.