உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தேசிகப் பாவை*

னால்,

பல்லவ தேசத்து அரசனான உலகபாலன் சந்திராபம் என்னும் தன்னுடைய தலைநகரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான். அப்போது, அவனுடைய நண்பனான சீவககுமரன் என்னும் அரசகுமாரன் அவனிடம் வந்து அவனுடைய அரண்மனையில் சில காலம் தங்கினான். சீவககுமாரன் ஏமாங்கத நாட்டின் அரசன். அவனுடைய நாட்டைக் கட்டியங்காரன் கைப்பற்றிக் கொண்டபடியால், அவன் தன்னுடைய இராச்சியத்தை மீட்டுக்கொள்ள முயன்று கொண்டிருந்தான். அந்தச் சூழ்நிலையில், சீவககுமாரன் பல நாடு களுக்குஞ் சென்று நண்பர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தபோது பல்லவ தேசத்துக்கு வந்து உலகபாலனோடு தங்கினான். உலக பாலனுடைய அரண்மனையில் நாடகங்களும் நடனங்களும் இசைப் பாட்டுகளும் நடப்பது வழக்கம். அந்த நகரத்தின் பேர்போன நாட்டியக் காரியான தேசிகப்பாவை என்னும் கணிகைப்பெண் வழக்கம்போல அரண்மனையில் நாட்டியம் ஆடினாள்.

தேசிகப்பாவை எழில் உள்ளவள். இசைக்கலையிலும் நாடகக் கலையிலும் நாட்டியக்கலையிலும் வல்லவள். அவளுடைய கலைப் புகழ் நாடெங்கும் பரவியிருந்தது. அவளுடைய நாட்டியத்தைக் காண அரசனும் அமைச்சரும்நகரப்பெருமக்களும் வந்திருந்தார்கள் விருந் தினனான சீவககுமாரனும் நாடக அரங்கத்துக்கு வந்திருந்தான். தேசிகப்பாவையின் நாட்டியம் எல்லோருடைய மனத்தையுங் கவர்ந்தது. இசைக்கு ஏற்றபடி யாழும் குழலும் மத்தளமும் தாளமும் இசைந்து முழங்கின. பாட்டின் கருத்துக்கு ஏற்ப தேசிகப்பாவை அபினயம் பிடித்து ஆடினாள்.

‘குழலெடுத்து யாத்து மட்டார் கோதையில் பொலிந்து மின்னும்

அழலவிர் செம்பொற் பட்டம் குண்டலம் ஆரம் தாங்கி

நிழலவிர் அல்குற் காசு சிலம்பொடு சிலம்ப நீள்தோள்

அழகிகூத் தாடு கின்றாள் அரங்கின்மேல் அரம்பை யன்னாள்’

முக்குடை இதழ்: 1974.