உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

உருக்கழடைய கெண்டைக், காரல்,

ஊர்த்த வெள்ளைவாற் றிருக்கைமீன்,

ஒலைவாலன், கருங்கண் ணாளன் ஊரிற் பெரிய மீனெலாம்

"வருக்கமுடைய பூகராசியின்

மடைத்தலை தத்திப் பாயவே மாவலி கங்கை பெருகிவார

வளமை பாரும் பள்ளீரே.

கதிரைமலைப்பள்ளு எனும் நூலிலும், திருக்கைக் கலியாணம் என்னும் நூலிலும் இதுபோலவே மீன்வகைகள் குறிக்கப்படுகின்றன. அவையும் ஏறக்குறைய மேற்கூறிய மீன்களின் பெயரையே கூறுகிற படியால், அந்நூற் செய்யுள்களை ஈண்டுக் காட்டவில்லை. திருக்கைக் கலியாணம் என்னும் சிறு நூல், திருக்கை என்னும் ஒருவகை மீனுக்குத் திருமணம் நடந்த போது, அத்திருமண ஊர்வலத்தில் கலந்துகொண்ட மீன் வகைகளை எல்லாம் குறிக்கின்றது.

மேலே காட்டிய பள்ளுப் பிரபந்தச் செய்யுள்களின் கருத்துப்படி, கீழ்க்கண்ட மீன்களின் பெயர்களை அறிகிறோம். அவை: பரவை, குரவை, உழுவை, அயரை, கெண்டை, கெளிறு, வரால், திருக்கை, இறால், சுறா, மத்தி, உல்லம், மலங்கு, கலவாய், வாளை, வஞ்சிரம், மட்டி, கத்தலை, ஆரல், வவ்வால், அயிரை முதலியன. இவைமட்டுந்தான் எனக் கருதவேண்டா. செய்யுள்களில் கூறப்பட்ட இவை, மீன்வகை களின் சில பொதுப்பெயர்களே. கடலிற்சென்று மீன்பிடிக்கும் தொழிலிற் பழகியவர்களைக் கேட்டபோது, அவர்கள் ஒவ்வொரு மீன்இனத்திலும் பல உட்பிரிவுகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்கள் கூறிய மீன்வகைகளையும் அவற்றின் உட்பிரிவுகளையும் ஈண்டுக் குறிப்பிடுவது அமைவுடைத்து. அவையாவன:-

66

இறால்: இது இறவு எனவும் கூறப்படும்.

'பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப்பதி

என்றார் சம்பந்தர். இதன் இனத்தைச் சேர்ந்தவை வருமாறு: போர் இறால், மோட்டிறால், நெட்டிறால், துள்ளிறால், சிங்க இறால், கல்இறால், பாசிறால், பேயிறால், வெள்ளிறால், சிவப்பிறால், வலிச்சிறால். இவை அமாவாசையில் தோல் உரிக்குமாம்.