உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி (தெள்கு = கொச, பறவை= பறப்பது)

447

அம்பிகாபதி

அம்பிகாபதி கோவை பாடிய அம்பிகாபதிப்புலவர் கூறும்

அவையடக்கத்தைப் பாருங்கள்.

அருளம்பி காபதி பொன்னடித் தாமரை சூட்டியகப்

பொருளம்பி காபதி கம்புனைந் தேனிப்பு னைந்தசெஞ்சொல்

தெருளம் புலவர்முன் செப்பிய போதுள தப்புரையார்

மருளுங் குழவி மழலைக்கென்னோ பொருளா மற்றிங் கென்றே.

(கம் = தலை. தப்பு = தவறு)

யசோதர காவியம்

யசோதர காவிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. அவர் அவையடக்கம் கூறுவதைப் பாருங்கள்.

உள்வி ரிந்த புகைக்கொடி உண்டென எள்ளு கின்றனர் இல்லை விளக்கினை. உள்ளு கின்ற பொருட்டிறம் ஒர்பவர் கொள்வர் எம்உரை கூறுதற் பாலதே.

குணவீரபண்டிதர்

நேமிநாதம் என்னும் இலக்கண நூலை எழுதிய குணவீரபண்டிதர் அவையடக்கங் கூறுகிறார்.

உண்ண முடியாத ஓதநீர் வான்வாய்ப்பட்(டு)

எண்ண அமுதான திதல்லையோ?-மண்ணின்மேல் நல்லாரைச் சேரதலால் நாசொன்ன புன்சொல்லும் எல்லாரும் கொளவர் ஈங்கு.

ஜீவசம்போதனை

ஜீவசம்போதனை நூலாசிரியர் பெயர் தெரியவில்லை. அவர் இந்நூலில்.