உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

மட்டவிழும் பங்கயங்கள் பூத்த மடுவகத்தே

கொட்டிகளும் தோடவிழ்ந்தால் போலதே - விட்டநிறை

மாண்கவிதை மாப்புலவோர்த் தொல்லவையுள் மாணாதே

யான்கவிதை செய்யும் இது.

என்று அடக்கங் கூறுகிறார்.

உமறுப்புலவர்

சீறாப்புராணம் பாடிய உமறுப்புலவரின் அவையடக்கச் செய்யுட்கள் இவை.

படித்தலத் தெழுகடல் குலகிரி நிலைபதற

எடுத்து வீசிய சண்டமாருதத் தினுக் கெதிரே

மிடித்துநொந்த சிற்றெறும்புஒரு மூச்சு விட்டதுபோல் வடித்த செந்தமிழ்ப் புலவர்முன் யான் சொலுமாறே!

அடியடித் தொறம் வழுவலால் விதிவிலக்கறியேன் படிபடித்த செஞ்சொற் புலவோர் முனம் பகர்தல் இடியிடித்திடு மாரவாரத்தினுக் கெதிரோர்

நொடிநொடிப்பது போலு மொத்திருந்த தென்நூலே

இன்னும் அவையடக்கச் செய்யுட்கள் பல இருக்கின்றன. இடம் பெருகும் என்றஞ்சி அவற்றையெல்லாம் இங்குக் காட்டாமல் விடுகிறேன். அவையடக்கங் கூறும் வழக்கம் அற்றுப்போன இக்காலத்தில், பழைய அவையடக்கச் செய்யுட்களைப் படிக்கும்போது சுவையாக இருக்கிறதல்லவா?