உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

71

முதுகுடுமிப் பெருவழுதி இருந்தான் என்று மதுரைக்காஞ்சியிலிருந்து தெரிகிறது. சுப்பிரமணிய ஐயரும் இதை ஒப்புக்கொள்கிறார். இது மட்டும் சரியே. ஆனால், மதுரைக்காஞ்சியின் தலைவனாகிய தலை யாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனும், வேள்விக்குடி சாசனம் கூறுகிற கடுங்கோனின் பேரனாகிய செழியனும் ஒருவரே என்று சுப்பிரமணிய ஐயர் கூறுவது தவறு. நெடுஞ்செழியன் - செழியன் என்னும் பெயர்கள் ஒரே அரசனைக் குறிக்கின்றன என்று இவர் யூகிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று. மேலும், இவர் கூறுவது போல, வேள்விக்குடி சாசனம், கடுங்கோனின் பேரனைச் செழியன் என்று கூறவில்லை; சேந்தன் என்று கூறுகிறது. சாசனத்தின் வாசகம் இது :

66

3

'மற்றவற்கு மருவினிய மகனாகி மண்மகளை மறுக்கடிந்து விக்ரமத்தின் வெளிப்பட்டு விலங்கல்வேல் பொறிவேந்தர்

வேந்தன் சிலைத்தடக்கை கொலைக்களிற்றுச் செழியன் வானவன் செங்கோற் சேந்தன்.

இச்சாசனத்தில், பட்டியலில் 3-ஆம் எண்ணுள்ள பாண்டியனுக்குச் செழியன், வானவன், சேந்தன் என்னும் பெயர்கள் கூறப் படுகின்றன. செழியன் என்பது பாண்டிய அரசர்களின் பொதுப்பெயர். வானவன் என்பது சேரஅரசர்களின் பொதுப்பெயர். சேரநாட்டை வென்று ஆண்ட படியால் இவன், சேர அரசரின் பொதுப் பெயராகிய ‘வானவன்' என்னும் பெயரைச் சூடிக்கொண்டான். சேந்தன் என்பது இவனுடைய இயற் பெயர். சுப்பிரமணிய ஐயர் இவனுடைய இயற்பெயரைச் செழியன் என்று தவறாகக் கருதுகிறார். சேந்தன் என்பதே இவனுடைய இயற்பெயர். சுப்பிரமணிய ஐயர் இவனுடைய இயற்பெயரைச் செழியன் என்று தவறாகக் கருதுகிறார். சேந்தன் என்பதே இவனுடைய இயற் பெயர். இதனை மேலே காட்டிய சாசனத்தில் வாசகத்தினால் அறிகிறோம்.

எனவே, “மதுரைக்காஞ்சி”த் தலைவனான நெடுஞ்செழியன் வேறு, வேள்விக்குடி சாசனத்தில் கூறப்படுகிற கடுங்கோனின் பேரனாகிய சேந்தன் வேறு.

சேந்தனைச் செழியன் என்று கருதிக்கொண்டு அவனை நெடுஞ்செழியனுடன் பிணைத்து விடுகிறார் சுப்பிரமணிய ஐயர். இது தவறான ஆராய்ச்சி அல்லவா? இவ்வாறு தவறான முடிபைக் கொண்டு பரம்பரைப் பட்டியல் காண்க.

3.