உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

மதுரைக் காஞ்சியின் காலமும், அதன் தலைவனான நெடுஞ்செழியன் காலமும் கி.பி.7-ஆம் நூற்றாண்டு என்றும், ஆகவே கடைச்சங்க காலம் கி.பி.7-ஆம் நூற்றாண்டு என்றும் சுப்பிரமணிய ஐயர் கூறுவது பெருந் தவறு.

வேள்விக்குடி சாசனத்தில் கூறப்படும் கடுங்கோனின் பேர னாகிய சேந்தன் (செழியன் என்பது தவறு) ஐயரின் ஆராய்ச்சிப்படி கி.பி.620 முதல் 65) வரை அரசாண்டவனாக இருக்கலாம். அதுபற்றி இங்கு ஆராய்ச்சி இல்லை. இங்கு நாம் கூறுவது நெடுஞ்செழியன் வேறு, செழியன் (சேந்தன்) வேறு என்பதே.

வேள்விக்குடி சாசனம் கூறுகிற, “செழியன் வானவன் செங்கோற் சேந்தன்”, சுப்பிரமணிய ஐயர் கருதுவதுபோல மதுரைக் காஞ்சியின் தலைவனான தலையாலங்கானத்துச் செருவேன்ற நெடுஞ் செழியனாக இருந்தால், அவனுடைய பெரும் புகழாகிய இரு பெரு வேந்தரையும் ஐம்பெரு வேளிரையும் ஒரே போர்க்களத்தில் தன்னந் தனியனாய் வென்ற வெற்றியைச் சாசனம் தவறாமல் கூறியிருக்கும் அல்லவா? அரசர்கள் தங்கள் புகழையும் தமது முன்னோருடைய புகழையும் (சிறப்பாகப் போரில் வெற்றி பெற்ற செய்தியை) தம் சாசனங்களில் எழுதுவது வழக்கம். இதனாலும் நெடுஞ்செழியன் வேறு, சேந்தன் வேறு என்பது வெள்ளிடைமலைபோல் விளங்குகிறது.

சுப்பிரமணிய ஐயரின் ஆராய்ச்சிக் கட்டுரையில் இத்துணைத் தவறுகளும் பிழைகளும் காணப்படுகின்றன. தவறுகளையும் பிழை களையும் ஆதாரமாகக் கொண்டு ஆராய்ந்த முடிவுகளும் தவறாகவே முடிந்தன. எனவே, மதுரைக் காஞ்சியின் காலமும் அதன் தலைவ னாகிய தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியன் காலமும் கி.பி.7-ஆம் நூற்றாண்டு என்று ஐயர் கண்ட முடிபு தவறாகிறது. அன்றியும், கடைச்சங்க காலம் கி.பி.7-ஆம் நூற்றாண்டு என்று அவர்கள் கண்ட முடிபும் தவறாகிறது.

அப்படியாயின், மதுரைக்காஞ்சியின் மதுரைக்காஞ்சியின் காலமும், அதன் தலைவனான பாண்டியன் நெடுஞ்செழியன் காலமும் எது என்னும் கேள்வி எழுகிறது. இதற்கு விடை ஆராய்வோம்.

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிக்குப் பிறகு பாண்டியன் நெடுஞ்செழியன் இருந்தான் என்று மதுரைக் காஞ்சி கூறுகிறது.