உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

மாதவியும் காவிரி ஆற்றின்மேல் மூன்று இசைப் பாடல்கள் பாடினாள். அவ்விசைப்பாடல்களிலும் காவிரி என்னும் பெயர் காவேரி என்று காணப்படுகிறது.

"மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ வாடை யதுபோர்த்துக் கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி! கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின்கணவன் திருந்து செங்கோல் வளையாமை யறிந்தேன் வாழி காவேரி!” 'காமர் மாலை யருகசைய நடந்தாய் வாழி காவேரி!

66

நாம வேலின் திறங்கண்டே யறிந்தேன் வாழி காவேரி!'

'ஊழி உய்க்கும் பேருதவி யொழியாய் வாழி காவேரி!

...

ஆழி யாள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி!

இயற்றமிழ்ப் பகுதிகளில் காவிரி என்னுஞ் சொல்லை வழங்கிய இளங்கோவடிகள் இசைத்தமிழ்ப் பகுதியாகிய கானல்வரியில் மட்டும் ஏன் காவேரி என்னுஞ் சொல்லை வழங்கினார்.

சிலப்பதிகாரத்தில் வருகிற கானல்வரி என்பது இசைத்தமிழ். அஃதாவது இசைப்பாட்டு. கடற்கரையில் பாடப்பட்ட தாகையால் அது கானல்வரி என்று பெயர்பெற்றது. கானல் - கடற்கரை. வரி - இசைப் பாட்டு. மேலே காட்டப்பட்ட வரிபாட்டுகளின் கடைசிச் சொற்கள் மூவசைச் சீராக முடிகின்றன. அதனால் காவிரி என்னும் ஈரசைச் சொல்லைக் காவேரி என்று மூவசைச் சீராக அமைத்துள்ளார். அவ் விடத்தில் காவிரி என்னுஞ் சொல்லை யமைத்தால் ஈரசைச் சீராகித் தளை தட்டுப்பட்டுச் செய்யுளோசை குறையுமாகையால் இவ்வாறு மாற்றி யமைத்தார். இவ்வாறு அமைப்பது இசைத் தமிழ் இலக்கணத் துக்குப் பொருந்தும். இசைத்தமிழ் இலக்கணத்தில் குற்றெழுத்து நெட்டெழுத் தாகவும் நெட்டெழுத்து குற்றெழுத்தாகவும் வருவது மரபு. அந்த முறைப்படி, இசைப்பாட்டுப் பகுதியாகையால், இங்கு மட்டும் காவிரி, காவேரி என்று வழங்கப்பட்டிருக்கிறது. இசைத்தமிழிலக் கணத்துக் ஏற்பவும் தளை தட்டாமலிருக்கவும் இளங்கேவடிகள் வரிப்பாட்டில் (இசைப்பாட்டில்) மட்டும் காவிரி என்னுஞ் சொல்லை காவேரி என்று வழங்கியுள்ளார்.