உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

93

ஏனைய இயற்றமிழ் புலவர்களில் காவிரியைக் காவேரி என்று கூறவே இல்லை.

.

"

இந்த நுட்பத்தை அறியாதவர், சிலப்பதிகாரத்தில் காவிரி என்னுஞ் சொல் காவேரி என்று வழங்கப்பட்டிருந்தபடியால், அந்நூல் பிற்காலத்தில் இயற்றப்பட்ட நூல் என்று கூறுவர். அவ்வாறு ஒருவர் எழுதியும் உள்ளார். திரு. வையாபுரிப் பிள்ளையவர்கள், காவேரி என்பது பிற்காலத்து வழக்குச் சொல் என்றும், இச்சொல்லை யாளுகிற சிலப்பதிகாரம் பிற்காலத்து நூல் (சங்ககாலத்து நூல் அன்று) என்றும் தாம் ஆங்கிலத்தில் எழுதியுள்ள தமிழ்மொழி - தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் 148 ஆம் பக்கத்தில் எழுதியுள்ளார்.' இவ்வாறு கூறுவது, ஆழ்ந்து கூர்ந்து ஆராயாமல் மேற்போக்காக மட்டும் ஆராய்கிறவர்களின் கூற்றாகும். மேலும், பிள்ளையவர்கள் கூறுவது போலக் காவேரி என்னும் சொல் பிற்கால இலக்கியங்களிலும் வழங்கப் படவில்லை. காவேரி என்பது பேச்சு வழக்கில், கொச்சைத் தமிழில் தவிர, இச்சொல் பிற்கால இலக்கியங்களிலும் வழங்கப்பட வில்லை. காவிரி என்னும் சொல்தான் முற்காலப் பிற்கால இலக்கியங்களில் வழங்கி வந்துள்ளது. காவேரி என்னுஞ் சொல் பேச்சு வழக்கில் மட்டும் இருந்து வருகிறது. காவேரி என்னும் சொல் ஒரே ஓர் இலக்கியத்தில் மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த இலக்கிய நூல் மேலே காட்டிய படி சிலப்பதிகாரம். சிலப்பதிகாரத்திலும் இசைப் பகுதியாகிய கானல்வரியில் மட்டும் இச்சொல் ஆளப்பட்டிருக்கிறது. ஏனைய இயற்றமிழ்ப் பகுதியில் காவிரி என்றே ஆளப்பட்டிருக்கிறது. இதனை க்கட்டுரையின் முற்பகுதியில் விளக்கமாகக் காட்டியுள்ளோம். எனவே, வையாபுரியார் கருதுவது போல, சிலப்பதிகாரம் பிற்காலத்து நூல் அன்று. அது கடைச்சங்க காலத்தின் இறுதியில் எழுதப்பட்ட நூலாகும். இதற்கு வேறு சில சான்றுகளும் உண்டு. அச்சான்றுகளைச் சமயம் வாய்க்கும்போது எழுதுவோம்.

கண்ணகியின் கைவளை

மதுரை மாநகரத்திலே கோவலன் இறந்தபிறகு கைம்பெண்ணான கண்ணகியார் தமது கையிலணிந்திருந்த சங்குவளையை (வளை – சங்கு)க் கொற்றவை கோயிலின் வாயிலில் சென்று தகர்த்து ஒடித்துக் கைம்மைக் கோலங் கொண்டார் என்று சிலப்பதிகாரங் கூறுகிறது. 1. History of Tamil Language and Literature. S. Vaiyapuri Pillai, 1956