உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

"கொற்றவை வாயில் பொற்றொடி தகர்த்து”என்பது அவ்வாசகம். (சிலம்பு. 23:18)பொற்றொடி என்பது பொன்வளை என்று பொருள் படுமானாலும் இங்கு வளை (சங்கு) யினால் செய்யப்பட்ட தொடி என்பதே பொருளாகும். சிலப்பதிகார அரும் பதவுரை யாசிரியரும் இவ்வாறே பொருள் கூறுகிறார்: 'பொற்றொடி- பொலிவினையுடைய சங்கவளை' என்று அவர் உரை எழுதியிருப்பது காண்க.

சங்ககாலத்தில் வறியவர் முதலாக அரசியர் வரையில் எல்லா மகளிரும் கைகளில் வளை (சங்குவளை)அணிந்திருந்தார்கள். இக் காலத்து மகளிர் கழுத்தில் தாலி அணிவது இன்றியமையாதது போல அக்காலத்து மகளிர் கைகளில் சங்குவளை அணிய வேண்டுவது இன்றி யமையாததாக இருந்தது. செல்வர் வீட்டு மகளிர் பொன் தொடிகளை அணிந்திருந்தாலும் அதனுடன், இன்றியமையாத சங்குவளைகளை யும் அணிந்திருந்தனர்.

இக்காலத்துக் கைம்பெண்கள் தாலிகளைக் களைந்துவிடுவது போல, அக்காலத்துக் கைம்பெண்கள் தம்முடைய கைவளைகளை உடைத்தெறிந்து வெறுங்கையினராக இருந்தனர். இந்த வழக்கப் படிதான் கண்ணகியார் தம்முடைய கைவளைகளைக் கொற்றவை கோயிலின் வாயிலில் சென்று தகர்ந்து உடைத்தார். கைம்பெண்கள் தங்களுடைய தொடிகளை (வளைகளைக் - கழித்துவிட்டபடியால் அவர்கள் ‘தொடிகழி மகளிர்' என்று கூறப்பட்டனர். “தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடி” என்று சங்கச் செய்யுள் (புறம், 238 : 7) கூறுகிறது. 'கழிகல மகடூஉ' என்பது புறம், 261 :18.

தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள கடல்களில் வளை (சங்கு) கிடைத்தது. பாண்டிநாட்டுக் கொற்கைக் குடாக்கடலில் முத்துச்சிப்பிகளும் இடம்புரிச் சங்கு வலம்புரிச் சங்குகளும் அதிகமாகக் கிடைத்தன. (பிற் காலத்தில் கொற்கைக் குடாக்கடல் மண்தூர்ந்து ஐந்து மைல் அளவுக்குத் தரையாக மாறி விட்டது.) சங்குகளைத் தொடியாக அறுத்து அரத்தினால் அராவிப் பலவகையான அளவில் தொடிகளைச் செய்தார்கள். அந்தத் தொடி களிலே பூ உருவங்களும் கொடி உருவங் களும் செதுக்கப்பட்டிருந் தன. சில வளைகளுக்குப் பலவித நிறங்கள் ஊட்டப்பட்டு வண்ண வளைகளாக அமைக்கப்பட்டன. காவிரிப்பூம்பட்டினம் உறையூர் முதலான நகரங்களில் நிலத்தை அகழ்ந்து ஆராய்ந்தபோது அங்குக் கிடைத்த பல பொருள்களில் ஒடிந்துபோன வளைத் துண்டுகளும்