உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

ஆநந்தமங்கலம்:

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

ஒலக்கூர் இரயில் நிலையத்திலிருந்து 5 மைலில் உள்ளது. இங்குக் கற்பாறையில் சமணத் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வுருவங்களின் நடுநாயகமாக உள்ளது. ஆனந்ததீர்த்தங்கரரின் உருவம். இத் தீர்த்தங்கரரின் பெயரே இவ்வூருக்கும் பெயராக அமைந் திருக்கிறது. ஆனந்த தீர்த்தங்க ரருக்கு ஒரு யக்ஷி குடை பிடிப்பது போன்றும், மற்றொரு யக்ஷி சாமரை வீசுவது போன்றும் அமைக்கப் பட்டுள்ளது. மதிரை கொண்ட பரகேசரிவர்மனுடைய (பராந்தகன் D 38 1) ஆவது ஆண்டில் (கி.பி.945இல்) எழுதப்பட்ட சாசனம் இங்கு உள்ளது. இங்கு ஜினகிரிப்பள்ளி இருந்ததென்றும் வினபாசுர குருவடிகள் மாணவர் வர்த்தமானப் பெரியடிகள் என்பவர் நாடோறும் இப் பள்ளியில் ஒரு சமண அடிகளுக்கு உணவு கொடுக்கும் பொருட்டு 5 கழஞ்சு பொன் தானம் செய்ததையும் இச்சாசனம் கூறுகின்றது. இவ் வூரில் இப்போது சமணர் இலர். சுற்றுப்புற ஊர்களிலிருந்து சமணர் தைத்திங்களில் இங்கு வந்து பூசைசெய்து செல்கின்றனர்.4

சிறுவாக்கம்:

ச்

இவ்வூரில் இருந்த சினகரம் இடிந்து கிடக்கிறது. இங்குள்ள சாசனத்தினால், இச் சினகரத்துக்கு, ஸ்ரீகரணப் பெரும்பள்ளி என்பது பெயர் என்றும், இதற்கு நிலங்கள் தானம் கொடுக்கப் பட்டன என்றும் தெரிகிறது.

பெரிய காஞ்சிபுரம்:

6

5

7

இங்குள்ள ஒரு தோட்டத்தில் சமணத் திருவுருவம் ஒன்று இருக்கிறது. பெரிய காஞ்சிபுரத்துக்குப் போகும் பாதையில் ஒரு சமணத் திருவுருவம் இருக்கிறது. காமாட்சியம்மன் கோவிலில் இரண்டாவது பிரகாரத்தில் சமண உருவங்கள் இருப்பதாகக் கூறப் படுகிறது.யாதோத்காரிபெருமாள் கோயில் அருகில் ஒரு சமண வுருவம் இருக்கிறது.’

மாகறல்:

இங்கு ஆதிபட்டாரகர் (இருஷபதேவர்) கோயில் ஒன்று உள்ளது. இவ்வூர் அடிப்பட்ட அழகர் கோயிலில் இரண்டு சமண உருவங்கள் உள்ளன.1° இவ்வூர் திருமாலீஸ்வரத்தைத் திருஞானசம்பந்தர் பாடி