உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் சமணம்

-

2

115

கிழக்கே 3 மைல். இங்குள்ள குன்றின் மேல் நேமிநாத தீர்த்தங்கரரின் திருவுருவம் பாறையில் பெரியதாகச் செதுக்கப்பட்டு மிகக் கம்பீரமாகக் காணப்படுகிறது. 161/, அடி உயரம். குந்தவை ஜினாலயம் என்று சாசனங் களில் இதற்குப் பழைய பெயர் கூறப்படுகின்றது. சோழ அரசர் குடும்பத் தில் பிறந்த குந்தவை என்னும் அம்மையாரால் இது அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள சமணத் திருவுருவங்களில் இவ்வுருவமே பெரியது என்று கருதப்படுகிறது. இக்குன்றின் அடிவாரத்திலும் இரண்டு சமணக் கோயில்கள் உள்ளன. இக்குன்றில், இயற்கையும், செயற்கையு மாக அமைந்துள்ள குகையில் சோழர் காலத்து ஓவியங்கள் சிதைந்து காணப் படுகின்றன. இவற்றில் சமவசரணம் போன்ற சித்திரம் ஒன்று சிதைந்து காணப் படுகிறது. பிற்காலத்து ஓவியங்களும் இங்குக் காணப்படுகின்றன. பாறையில் சில சிற்ப உருவங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.

"ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து பங்களநாட்டு நடுவில்வகை முகை நாட்டுப் பள்ளிச் சந்தம் வைகாவூர்த் திருமலை ஸ்ரீகுந்தவை ஜினாலயம்” என்று கல்வெட்டுக் கூறுகின்றது; (S.I.I. Vol. No. 98) கடைக் கோட்டூர்த் திருமலை பரவாதி மல்லா மாணாக்கர் அரிஷ்டநேமி ஆசாரியார் ஒரு திருமேனி (திருவுருவம்) இக்கோயிலில் செய்து வைத்ததாக இன்னொரு கல்வெட்டெழுத்துக் கூறுகின்றது. பொன்னூர் மண்ணை பொன்னாண்டை மகள் நல்லாத்தாள் என்பவர் ‘ஸ்ரீ விஹார நாயகர் பொன் னெயில் நாதர்’ (அருகர்) திருவுருவம் அமைத்து இக் கோயிலுக்குக் கொடுத்த செய்தி இங்குள்ள மற்றொரு கல்வெட்டுக் கூறுகின்றது. பல்லவவரசர் தேவியார் சிண்ணவையாரும் இளைய மணி மங்கை என்பவரும் இக்கோயிலுடைய ஆரம்ப நந்திக்கு நந்தா விளக்குக்காக முறையே அறுபது காசும் நிலமும் கொடுத்த செய்தியை இன்னொரு கல்லெழுத்துக் கூறுகின்றது. கோராஜ கேசரிவர்மன் என்னும் இராசராச தேவர் காலத்தில், குணவீரமா முனிவர் என்னும் சமணர் நெல்வயல் களுக்கு நீர்பாயும் பொருட்டு கணிசேகர மருபொற் சூரியன் கலிங்கு' என்னும் பெயருடன் ஒரு கலிங்கு கட்டினார் என்பதை இங்கு ஒரு பாறையில் எழுதப்பட்டுள்ள செய்யுள் கூறுகின்றது. (S.I.I. Vol. No. 94) அச்செய்யுள் இது :

அலைபுரியும் புனற்பொன்னி ஆறுடைய சோழன்

அருண்மொழிக்கு யாண்டிருபத் தொன்றாவ தென்றும்