உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

கலைபுரியு மதிநிபுணன் வெண்கிழான் கணிசே கரமருபொற் சூரியன்றன் றிருநாமத்தால் வாய் நிலைநிற்குங் கலிங்கிட்டு நிமிர்வகை மலைக்கு

நீடூழி இருமருங்கும் நெல்விளையக் கொண்டான் கொலைபுரியும் படையரசர் கொண்டாடும் பாதன்

விடால்:

குணவீர மாமுனிவன் குளிர் வைகைக் கோவே.

வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள இரண்டு குன்றுகளில் இயற்கையாயமைந்த இரண்டு குகைகள் உள்ளன. குகை களின் முன்புறத்தில் இரண்டு மண்ட பங்கள் உள்ளன. மண்டபங்களில் ஒன்றைப் பல்லவ மன்னன் என்ப வனும், மற்றொன்றை இராசகேசரி வர்மன் (ஆதித்தியன்) என்பவனும் கட்டியதாக இங்குள்ள கல் எழுத்துக்கள் கூறுகிற படியால் பல்லவ அரசனும், சோழமன்னனும் இவற்றைக் கட்டியதாகக் கொள்ள லாம். இக் குகைகளில் பண்டைக் காலத்தில் சமண முனிவர் தங்கியிருந்தனர். 'குணகீர்த்திபடாரர் வழி மாணாக்கியார் கனக வீரக் குரத்தியாரையும் அவர் வழிமாணாக் கியாரையும்' பாதுகாத்த செய்தி இங்குள்ள கல் எழுத்து கூறுகின்றது. இவ்வூருக்குச் ‘சிங்கபுர நாட்டுக் கீழ்வழி விடால் மாதேவி ஆராநதி மங்கலம்' என்று கல்வெட்டெழுத்துக் கூறுகின்றது.

புனதாகை :

33

(பூனாவதி அல்லது திருவத்தூர்) வட ஆர்க்காடு ஜில்லா செய்யாறு தாலுகாவில் ஆனக்காவூருக்கு ஒரு கல் தொலைவில் இருக்கிறது. பண்டைக் காலத்தில் சமணர் இருந்த ஊர். இங்கு ஒரு சமணக் கோவிலும் இருந்தது. ஒரு சைவர் வளர்த்த பனைமரங்கள் யாவும் ஆண்பனையாகப் போவதைக் கண்டு இவ்வூர்ச் சமணர் ஏளனம் செய்ய, அதனைப் பொறாத சைவர் அக் காலத்தில் அங்குவந்த ஞானசம்பந்தரிடம் கூற, அவர் பதிகம் பாடி ஆண் பனைகளைப் பெண் பனையாகச் செய்தார் என்று பெரியபுராணம் கூறுகிறது. இவ்வூரிலிருந்த சமணக் கோயில் இடிக்கப்பட்டுத் தரைப்பகுதி மட்டுங் காணப்படுகிறது. இக் கோயிற் கற்களை எடுத்துக் கொண்டு போய் இவ்வூருக்கருகில் உள்ள திருவோத்தூர்ச் சைவக் கோயிலைக் கற்றளியாகக் கட்டினார்கள் என்று கூறப்படுகிறது.34 இவ்வூர்ச் சமணக்கோயில் பாழ்படவே, இக் கோயிலைச் சேர்ந்த இரண்டு சமணத் திருவுருவங்கள் வெளியே தரையில்