உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -7

உள்ளது. இங்குப் பல சாசனங்கள் காணப்படுகின்றன. 58 குலோத்துங்கச் சோழரது 9ஆவது ஆண்டில் வீரசேகர் காடவராயர் என்பவர் இங்கிருந்த நாற்பத்தெண்ணாயிரம் பெரும்பள்ளிக்கு வரிப்பணம் தானம் செய்திருக்கிறார், இராசராச தேவரது 13ஆவது ஆண்டில் இங்கிருந்த மேலைப்பள்ளிக்கு பணம் தானம் செய்யப்பட்ட செய்தியை இன்னொரு சாசனம் கூறுகிறது. இந்தத் தானத்தை ஆதி பட்டாரகர் புஷ்ப சேனர் என்பவரிடம் ஒப்புவிக்கப்பட்டது. அப் பாண்டார்க்கு வைகாசித்திருநாள் சிறப்பு நடைபெற்றதையும் தை மாதத்தில் ஒரு திருவிழா நடைபெறும்படி நிலம் தானம் செய்யப் பட்டதையும், திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் காலத்துச் சாசனம் ஒன்று கூறுகின்றது. திருநறுங் கொண்ட பெரிய பாழி ஆழ்வார்க்கு நிலம் தானம் செய்யப்பட்ட செய்தி இன்னொரு சாசனம் கூறுகின்றது. இங்கிருந்த கீழைப்பள்ளிக்கு ஸ்ரீதரன் என்பவர் பொன் தானம் செய்ததை இன்னொரு சாசனம் கூறுகின்றது. இக்கோயில் ஸ்தலபுரானம் இவ்வூர்ச் சமணரிடம் உண்டு.

ஒலக்கூர் :

59

திண்டிவனம் தாலுகா, பிராமண வீதியில் உள்ள சிதைந்து தேய்ந்து போன கல்சாசனம். ‘பிருதிவி விடங்க குரத்தி’ என்னும் சமண ரியாங்கனையைக் குறிப்பிடுகிறது.

திருக்கோயிலூர் :

60

திருக்கோவலூர் என்பது இதன் சரியான பெயர். இங்குள்ள பெருமாள் கோயிலுள்ள கொடிமரம் சமணருடைய மானஸ்தாபம் போன்றிருக்கிறது. ஆகையால் இது ஆதியில் சமணர் கோயிலாக இருந்திருக்கக்கூடும் என்று ஐயுறுகின்றனர்.61 இங்கு அரசாண்ட அரசர்களில் பலர் சமணராக இருந்தனர் என்பதும் கருதத்தக்கது. தாதாபுரம் :

இதன் பழைய பெயர் இராசராசபுரம். (திண்டிவனம் தாலுகா.) இவ்வூர்ப் பெருமாள் கோவிலின் வடக்கு, மேற்குச் சுவர்களில் உள்ள சாசனங்களினால் இங்குச் சமணக் கோயில்கள் இருந்தன என்பது அறியப்படுகிறது. இச்சாசனம் இராசகேசரிவர்மரான இராசராச தேவரது 21ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. ‘குந்தவை ஜினாலயம்’ என்னும் சமணக் கோயிலைப் பராந்தக குந்தவைப் பிராட்டியார் என்னும் சோழ