உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

127

அரசியார் (இவர் பொன் மாளிகைத் துஞ்சிய தேவருடைய மகளார்) கட்டி, அக் கோயிலுக்குப் பொன், வெள்ளிப் பாத்திரங்களையும் முத்துக்களையும் தானம் செய்ததை இச்சாசனம் கூறுகின்றது.62 வட ஆர்க்காடு மாவட்டம் போளூர் தாலுகா திருமலையில் உள்ள சமணக் கோயிலையும், திருச்சி திருமலைவாடியில் உள்ள சமணக் கோயிலையும் இந்த அம்மையார் கட்டினார். (S.I. Vol. No. 67, 68).

வேலூர் :

(திண் டிவனம் தாலுகா) இங்கிருந்த சமணக் சமணக் கோயிலை ஜயசேனர் என்பவர் பழுதுதீர்த்துப் புதுப்பித்தார் என்று ஒரு சாசனம் கூறுகிறது.63

வீரசேகரப் பெரும்பள்ளி :

64

இது வந்தவாசி தாலுகாவில் உள்ள சளுக்கி என்னும் ஊர் இருந்த குகைக் கோயில் என்பது சாசனங்களால் அறியப்படுகிறது. பெருமண்டூர் :

(திண்டிவனம் தாலுகா) இங்குள்ள சந்திரநாதர் கோயில் மண்டபத் தூணில் உள்ள சாசனம், 'பெருமாண்டை நாட்டுப் பெருமாண்டை இரவிகுல சுந்தரப் பெரும்பள்ளி'யைக் கூறுகிறது.65 இன்னொரு சாசனம் பெரும் பள்ளியைக் குறிக்கிறது.

திட்டைக்குடி :

66

68

(விருத்தாசலம் தாலுகா) இங்குள்ள வைத்தியநாத சுவாமி கோயில் சாசனங்கள், மகதை மண்டலத்துத் தென்கரைத் தொழுவூர் பற்றில் வாகையூர் பள்ளிச் சந்தத்தையும்,” இடைச்சிறுவாய் அமணன்பட்டு என்னும் ஊரையும் குறிப்பிடுகின்றன. இதனால், பண்டைக் காலத்தில் இங்குச் சமணர் இருந்த செய்தி அறியப்படும்.

கீழுர் :

(திருக்கோயிலூர் தாலுகா) இங்குள்ள சாசனம்,

கண்ணெனக்

காவியர் கயல்பயி லாவியூ ரதனில்

திக்குடை யிவரும் முக்குடையவர்தம்

அறப்புற மான திறப்பட நீக்கி’