உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

கற்றூண் ஒன்றில் சமண தீர்த்தங்கரரின் சிறிய திருவுருவம் இருந்ததைப் பார்த்ததாக என் நண்பர் ஒருவர் கூறுகின்றார்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டித் தாலுகாவில் உள்ளது. இவ்வூர் மருந்தீச் சுரர் கோயிலின் மண்டபத்தில் உள்ள, திரிபுவன சக்கரவர்த்தி இராசராச தேவர் III-உடைய 11-ஆவது ஆண்டில் (கி.பி. 1227, மே. 15) எழுதப்பட்ட சாசனத்தில், சாத்தமங்கலத்தைச் சேர்ந்த ‘பள்ளிச் சந்தம்,' குறிக்கப் பட்டுள்ளது.133 இதனால், இவ்வூருக்கருகில் இருந்த சாத்த மங்கலத்தில் சமணக் கோயிலுக்குரித்தான நிலங்கள் இருந்த செய்தி அறியப் படுகிறது. ஆதலால், பண்டைக்காலத்தில் இங்குச் சமணர் இருந்திருக்க வேண்டும்.

திருநாகேச்சுரம் :

ம்

கும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த திருநாகேச்சுரர் கோயிலின் மண்டபக் கற்றூணில் உள்ள சாசனத், 'தென்கரைத் திரைமூர் நாட்டில்,’ இருந்த ‘மிலாடுடையார் பள்ளி,' என்னும் சமணக் கோயிலைக் குறிப்பிடுகிறது. இந்த மிலாடுடையார் பள்ளி, திருக்கோவலூரில் இருந்த மிலாட அரசனால் கட்டப்பட்டிருக்க வேண்டும். முற்காலத்தில் இங்கு ஒரு சமணக் கோயில் இடிந்து கிடந்ததென்றும், அக்கோயிற் கற்களைக் கொண்டு இப்போதுள்ள திருநாகேச்சுரத்துச் சைவக் கோயில் கட்டப் பட்டதென்றும் இவ்வூரார் கூறுவர். அம்மன் கோயில் மண்டபத் தூண் களில் இப்போதும் சமண உருவங்கள் காணப் படுகின்றன. இவை, இவ் வூரார் கூறுவதை உறுதிப்படுத்துகின்றன. இவ்வூருக்கு அருகில் உள்ள வயல்களில் சமண உருவங்கள் காணப்படுகின்றன.134 திருநாகேச்சுரத் திற்குப் பண்டைக்காலத்தில் 'குமாரமார்த்தாண்டபுரம்,' என்று பெயர் வழங்கியதென்றும், இங்கிருந்த மிலாடுடையார் பள்ளியில் மண்டபத்தையும், கோபுரத்தையும், ஒரு வணிகர் கட்டினார் என்றும் இராஜகேசரி வர்மன் என்னும் சோழனது 22-வது ஆண்டில் எழுதப்பட்ட சாசனம் கூறுகின்றது.

திருப்புகலூர் (வர்த்தமானீச்சுரம்) :

இவ்வூர் - நன்னிலம் இரயில் நிலையத்துக்குக் கிழக்கே நான்கு மைலில் உள்ளது. இங்கு வர்த்த மானீச்சுரர் கோயில் உண்டு, இக் கோயில் இப்போது சைவக் கோயிலாக உள்ளது. ஆனால், இக்