உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

-

143

கோயிலின் பெயரைக் கொண்டே இது பண்டைக் காலத்தில் சமணக் கோயிலாக இருந்தது என்பதை அறியலாம். ஸ்ரீ வர்த்தமானர் (மகாவீரர்) இருபத்து நான்காவது தீர்த்தங்கரராவர். இச் சமணக் கோயில் கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே சைவரால் கைப்பற்றப்பட்டுச் சைவக் கோயிலாக்கப்பட்டது. அப்பரும், சம்பந்தரும் இக் கோயிலைப் பாடியுள்ளனர். இங்குச் சமணர் பண்டைக்காலத்தில் இருந்தனர்.

பழையாறை :

136

135

இதனைப் ‘பழையாறு’, ‘பழசை' என்றுங் கூறுவர். பட்டீச்சுரத்துக்குத் தென்கிழக்கே ஒரு மைலில் உள்ளது. சோழ அரசர்களின் உறவினர் இங்கு வாழ்ந்திருந்தனர். இங்குப் பண்டைக் காலத்தில் சமணர் இருந்தனர். கி.பி. 7ஆம் நூற்றாண்டில், அப்பர் சுவாமி காலத்தில், இங்கே கலகம் ஏற்பட்டுச் சமணர் துரத்தப்பட்ட செய்தியைப் பெரிய புராணம் கூறு கின்றது. கி.பி. 11ஆம் நூற்றாண்டிலும், இங்குச் சமணரும், சமணக் கோயிலும், இருந்த செய்தி அறியப்படுகிறது. இங்கிருந்த சமணக் கோயிலில் எழுந்தருளியிருந்த அருகக்கடவுள்மீது இயற்றப்பட்ட இரண்டு செய்யுள்கள் யாப்பருங்கல விருத்தி உரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இங்கு வாழ்ந்திருந்த சோழ அரசன் இக் கோயிலுக்குச் சிறப்புச் செய்தான் என்பதும் விளங்குகின்றது. அச்செய்யுள் வருமாறு:

'தாழி யோங்கு மலர்க் கண்ணவர் தண்ணடி பாழி யோங்கு புனலார் பழை யாற்றுள்

காழி நின்றம் மதியான் மதிசேர்ந்து

வாழி என்று வணங்க வினை சேரா.’

'முழங்கு களியானை மூரிக் கடற்படை முறிதார் மன்னர் வழங்கு மிடமெல்லாந் தன்புகழே போக்கிய வைவேல் விண்ணன் செழுந் தண்பூம் பழசையுட் சிறந்தது நாளுஞ் செய,

வெழுந்த சேதிகத் துள்ளிருந்த வண்ண லடி

விழுந்தண்பூ மலர்களால் வியந்து நாளுந் தொழத் தொடர்ந்து நின்ற வல்வினை துறந்துபோ மாலரோ.’

மருத்துவக்குடி:

இவ்வூர், பாபநாசம் தாலுகாவில் உள்ளது. இவ்வூர் ஐராவதீஸ்வரர் கோயில் மண்டபத்தில் உள்ள, திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ குலோத்துங்க