உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

சோழ தேவர் III உடைய 16ஆவது ஆண்டில் (கி.பி. 1194 இல்) எழுதப்பட்ட சாசனத்தில், ஜனநாதபுரம் என்னும் ஊரில் இருந்த சேதிகுல மாணிக்கப் பெரும்பள்ளி, கங்கருள சுந்தரப் பெரும்பள்ளி என்னும் இரண்டு சமணக் கோயில்கள் கூறப்படுகின்றன.137 இதனால், இவ்வூருக்கருகில் சமணரும் சமணக் கோயில்களும் இருந்த செய்தி அறியப்படும்.

திருவலஞ்சுழி :

இது கும்பகோணம் தாலுகாவில் உள்ளது. இங்குள்ள சிவன் கோயிலுக்கருகில் சில சமண உருவங்கள் காணப்படுகின்றன.138 இதனால், இவ்வூரில் பண்டைக் காலத்தில் சமணர் இருந்தது அறியப்படுகிறது. மன்னார்குடி :

மன்னார்குடித் தாலுகாவின் தலைநகர் பண்டைக்காலத்தில் இவ்வூரில் சமணர் அதிகமாக இருந்தனர். இப்போதும் சில சமணர் உள்ளனர். ஒரு சமணக் கோயிலும் இருக்கிறது.139 இங்குள்ள ராஜ கோபால சுவாமி கோயில் துவஜஸ் தம்பம், ஜைனருடைய மானஸ் தமபம் போன்றிருக்கிறபடியால் இஃது ஆதியில் சமணக்கோயிலாக இருந்திருக்கக்கூடும் என்று கருதுகின்றனர்.140 தீபங்குடி :

நன்னிலம் தாலுகாவில் உள்ளது. நன்னிலத் திற்குத் தென்மேற்கு 7 மைலில் உள்ளது. இதுவும் பழைய சமண ஊர். இங்கிருந்த ஜயங்கொண்டார் என்னும் சமணர் ‘தீபங்குடிப் பத்து', என்னும் சிறந்த, இனிய, அழகிய பாடல்களைப் பாடியுள்ளார். இவரே கலிங்கத்துப் பரணி என்னும் நூலை இயற்றியதாகக் கூறுவர். இத்தீபங்குடியில் ப்போதும் சமணர் உள்ளனர். சமணக் கோயில் ஒன்றும் இருக்கிறது.

141

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்னும பல இடங்களில் சமணர் இருந்த செய்தி சாசனங்களால் அறியப்படுகிறது. 'அருமொழி தேவ வளநாட்டு இங்களநாட்டுப் பாலையூர்ப் பள்ளி,142 அரிசிலுக்கும் காவிரிக்கும் நடுவான உய்யக் கொண்ட வளநாட்டுத் திரைமூர் நாட்டுப் பள்ளிச்சந்தம், 'திருவாலி நாட்டுக் குறுவாணியக்குடி பள்ளி, 144 உய்யக் கொண்ட வளநாட்டு அமண்குடி, என வரும் சாசனப் பகுதிகளால் தஞ்சாவூர் மாவட்டத்தில் சமணர் இருந்த செய்தி அறியப்படும்.

143

145