உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள்

-

சமணம்

149

செலுவனூர்:

2

2

செல்வநல்லூர் என்றும் கூறப்படும். முதுகுளத்தூருக்குத் தென்கிழக்கில் 97 மைலில் உள்ளது. இராமநாதபுரத்திற்குத் தென்மேற்கே 23 மைலில் உள்ளது. இக்கிராமத்திற்கு மேற்கே குடிகள் அற்ற ஒரு கிராமத்தில் ஒரு சமணத் திருமேனி இருக்கிறது.16.

9. மதுரை மாவட்டம்

பண்டைக் காலத்திலே மதுரையிலே சமணசமயம் சிறப்படைந் திருந்தது. மதுரையைச் சூழ்ந்துள்ள மலைகளிலும், பாறைகளிலும், செதுக்கப்பட்டுள்ள பிராமி எழுத்துக்கள், கி.மு. இரண்டாம் நூற்றாண்டி லேயே அங்குச் சமணர் இருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கின்றன. மூர்த்தி நாயனார் காலத்திலே இங்குச் சமண சமயம் இருந்த செய்தியைப் பெரிய புராணம் கூறுகிறது.

ஞான சம்பந்தர் காலத்திலே பாண்டி நாட்டில் சமண சமயம் மிகச் சிறப்புற்றிருந்தது. கூன்பாண்டியன் என்னும் நெடுமாறனும் சமணசமயத்தை மேற்கொண்டிருந்தான். ஆகவே பாண்டி நாட்டில் சமணசமயம் தலை தூக்கி நின்றது. இச் செய்தியைப் பெரிய புராணம் இவ்வாறு கூறுகிறது:

"பூழியர் தமிழ்நாட் டுள்ள

பொருவில்சீர்ப் பதிகள் எல்லாம்

பாழியும் அருகர் மேவும்

பள்ளிகள் பலவு மாகிச்

சூழிருட் குழுக்கள் போலத்

தொடைமயிற் பீலி போடு

மூழிநீர் கையிற் பற்றி

அமணரே யாகி மொய்ப்ப.

"பறிமயிர்த் தலையும் பாயும்

பீலியும் தடுக்கும் மேனிச்

செறியுமுக் குடையு மாகித்

திரிபவர் எங்கு மாகி

அறியும்அச் சமய நூலின்

அளவினில் அடங்கச் சைவ

நெறியினிற் சித்தஞ் செல்லா

நிலைமையில் நிகழுங் காலை.