உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

இவ்வாறு சமணர் ஆதிக்கம் மிகுந்திருந்த பாண்டி நாட்டில் ஞானசம்பந்தர் சென்று, பாண்டியனுக்கு வெப்பு நோயை உண்டாக்கிப் பின்னர் அந்நோயைத் தீர்த்துப் பாண்டியனைச் சைவசமயத்தில் சேர்த்தார். பாண்டியன் நீறுபூசிச் சைவனானான். இதனையறிந்த நாட்டுமக்களும் நீறணிந்து சைவர் ஆனார்கள் என்று பெரியபுராணம் கூறுகிறது.

“தென்னவன் தனக்கு நீறு

சிரபுரச் செல்வர் ஈந்தார் முன்னவன் பணிந்து கொண்டு

முழுவதும் அணிந்து நின்றான்

மன்னன்நீ றணிந்தான் என்று

மற்றவன் மதுரை வாழ்வார்

துன்னிநின் றார்கள் எல்லாம்

தூயநீ றணிந்து கொண்டார்.

99

இதனோடல்லாமல், ஞானசம்பந்தர் சமணருடன் வாதப் போர்செய்து தோல்வியுறச் செய்து அவர்களைக் கழுவில்

ஏற்றினார். அமணருடைய பாழிகளும் பள்ளிகளும் தகர்த்து அழிக்கப்பட்டன.

66

‘பூழியன் மதுரை யுள்ளார்

பாழியும் அருகர் மேவும்

புறத்துளார் அமணர் சேரும்

பள்ளியும் ஆன எல்லாம்

கிளரொளித் தூய்மை செய்தே

வாழியப் பதிகள் எல்லாம்

கீழுறப் பறித்துப் போக்கிக்

மங்கலம் பொலியச் செய்தார்.

99

என்று பெரிய புராணம் கூறுகிறது. இவ்வாறு பெரிய புராணம் கூறுவதைக் கொண்டு அக் காலத்திலேயே சமண சமயம் பாண்டி நாட்டில் அழிந்து விட்டது என்று கருதக்கூடாது. ஏனென்றால், ஞானசம்பந்தர் காலத்திற்குப் பிறகு பல நூற்றாண்டு வரையில் சமணசமயம் பாண்டி நாட்டில் இருந்த செய்தி கல்வெட்டுக்களினால் தெரிகிறது. ஞானசம்பந்தர் காலத்தில் பாண்டிநாட்டிலே சமணசமயத்தின் சமணசமயத்தின் ஆதிக்கம் குறைவுபட்டுப் பின்னர்ப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அச்சமயம் மறையத் தொடங்கிற்று என்று கருத வேண்டியிருக்கிறது.