உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

-

179

தொண்டை நாட்டிலே வட ஆர்க்காடு மாவட்டத்தில் இப்போதும் சமணர் அதிகமாக உள்ளனர். ஆர்க்காடு, போளூர், வந்தவாசித் தாலுகாக்களில் இவர்கள் அதிகமாக உள்ளனர்.

சமணர்கள், நயினார், உடையார், முதலியார், செட்டியார், ராவ், தாஸ் என்னும் பட்டப் பெயர்களைச் சூட்டிக்கொள்கிறார்கள். நெற்றியில் சந்தனம் அணிகிறார்கள். அகலமான நீண்ட கோடாக அணிகிறார்கள். பூணூலும் அணிகிறார்கள். பிராமணரைவிட உயர்ந்தவர்கள் என்று கருதுகிறார் கள். மாமிச உணவு புசிப்பதில்லை. இரவில் உணவு கொள்ள மாட்டார்கள். ஆகவே, சூரியன் மறைவதற்குள்ளாக உணவு கொள்கிறார்கள்.

சிவராத்திரி, தீபாவளி, பொங்கல், கலைமகள் பூசை முதலிய பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள்.

சமணக் கோயில்களின் அமைப்பு, சைவ வைணவக் கோயில்களின் அமைப்புப்போலவே உள்ளன. ஆனால், இந்தக் கோயில்கள் மிகச் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளன. கோயில்களில் மூலவர் என்றும் உற்சவமூர்த்தி என்றும் திருவுருவங்கள் உள்ளன. சாஸ்தா, இயக்கி முதலிய பரிவாரத் தெய்வங்களின் உருவங்களும் இக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ளவர் அனைவரும் திகம்பர சமணர் ஆகையினாலே இக் கோயில்களில் உள்ள திருமேனிகள் திகம்பர உருவமாக (ஆடையில்லாமல்) அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பரிவாரத் தெய்வங்கள் ஆடை உள்ளனவாக அமைக்கப்படுகின்றன. அருகக் கடவுள் அல்லது தீர்த்தங்கரர்களின் திருவுருவங்கள் நின்ற கோலமாகவும் வீற்றிருக்கும் கோலாகவும் அமைக்கப்பட்டுள்ளன. வைணவ, பௌத்தக் கோயில்களில் சில இடங்களில் கிடந்த (படுத்த) வண்ணமாகக் காணப்படுகிற பள்ளிகொண்ட திருவுருவங் களைப்போலச் சமணத் திருவுருங்கள் கிடந்தவண்ணமாக அமைக்கப்படுவது இல்லை.

பூசை

சமணக் கோயில்களில் நாள்தோறும் காலை மாலைகளில் நடைபெறுகிறது. அபிஷேகம், தீப ஆராதனை, அர்ச்சனை முதலியவை சைவ வைணவக் கோயில்களில் நடைபெறுவதுபோலவே நடைபெறுகின்றன. வடமொழியில் மந்திரங்கள் ஓதப்படுகின்றன.

ஆண்டுதோறும் சமணக் கோயில்களில் திருவிழாக்கள் நடை பெறுவது உண்டு. உற்சவ காலத்தில் உற்சவ மூர்த்திகளையும் பரிவாரத் தெய்வ உருவங்களையும் விமானத்திலும், விமானத்திலும், வாகனங்களிலும்