உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -7

எழுந்தருளச் செய்கிறார்கள். சமண மூர்த்திகள் வீதிவலமாக எழுந்தருளும்போது அம் மூர்த்திகளுக்கு முன்னர்த் தருமச் சக்கரம் எழுந்தருளும் சைவ வைணவக் கோயில்களில் முறையே திரி சூலமும், சக்கரத்தாழ்வாரும் எழுந்தருளுவதுபோல, ஒன்றின்மேல் ஒன்றாக அமைந்த முக் குடைகளுடன் உற்சவமூர்த்தி எழுந்தரு ளுகிறார்.

பண்டைக் காலத்தில் பாடலிபுரம் (கடலூர்), ஜினகரஞ்சி (காஞ்சிபுரம்) முதலிய இடங்களில் சமணர்களின் மடங்கள் இருந்தன. இப்போது தமிழ்நாட்டில் உள்ள சமண மடம் சித்தாமூரில் உள்ள மடம் ஒன்று தான். சித்தாமூர் தென்னார் காடு மாவட்டம் திண்டிவனம் தாலுகாவில் இருக்கிறது. சித்தாமூர் வீரனாமூர், விழுக்கம் பெருமாண்டூர், ஆலக் கிராமம், வேலூர், தாயனூர் முதலிய ஊர்களில் இருக்கும் சமணர்கள் சேர்ந்து சித்தாமூர் மடத்துத் தலைவரை ஏற்படுத்துகிறார்கள். இந்த மடத்துத் தலைவருடைய பெயராவது: டெல்லி கொல்லாபுர ஜினகாஞ்சி பெனுகொண்டா சதுர் சித்த சிம்மசனாதீஸ்வர ஸ்ரீமத் அபிநவ லக்ஷ்மீ சேனபட்டராக பட்டாசாரிய வர்ம சுவாமிகள் என்பது.

சைனர்கள் வியாபாரிகளாகவும், உபாத்திமார்களாகவும், பயிர்த் தொழில் செய்பவர்களாகவும், உத்தியோகஸ்தர்களாகவும், பல தொழில் செய்கிறார்கள். வடநாட்டுச் சைனரைப்போலத் தமிழ்நாட்டுச் சைனர் பெருஞ்செல்வம் உடையவர் அல்லர். இவர்களில் சிலர் சைவ சமயத்தவராக மாறி வருகிறார்கள்.