உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

வெண்மை, செம்மை, பொன்மை, பசுமை, கருமை, நெடுமை, குறுமை, பருமை, நேர்மை, வட்டம், கோணம், சதுரம் என்பன அறியும். செவியினால் ஓசை வேறுபாடும் சொற்பாடும் பொருளும் அறியும். மனத்தினாலறியப்படுவது இதுபோல்வன வேண்டுமெனவும், இஃது எத்தன்மை எனவும் அனுமானித்தல், அனுமானமாவது புகை கண்டவழி நெருப் புண்மை கட்புலன் அன்றாயினும்; அதன்கண் நெருப்பு உண்டென்று அனுமானித்தல்.

6

இவ்வகையினான் உலகிலுள்ள

வெல்லாம் மக்கட்கு

அறிதலாயின. இனி, அவற்றை அறியும் உயிர்களை வருகின்ற சூத்திரங்களாற் கூறுதும்.

புல்லும் மரனும் ஓரறி வினவே

பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே.

ஓரறிவுயிராமாறு புல்லும் மரனும் என்று சொல்லப்பட்ட இருவகை உடம்பினாலறியும்; அக் கிளைப் பிறப்புப் பிறவும் உள என்றவாறு.

பிறவாவன கொட்டியுந் தாமரையுங் கழுநீரும் என்பன.

நந்து முரளு மீரறி வினவே

பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே.

ஈரறிவுயிர் உணர்த்துதல் நுதலிற்று.

ஈரறிவுயிராவன நந்தும், முரளுமென்று சொல்லுவ; பிறவுமுள ஈரறிவுயி ரென்றவாறு.

நந்து என்றதனால் சங்கு, நத்தை, அலகு, நொள்ளை என்பன கொள்க. முரள் என்றதனால், இப்பி, கிளிஞ்சல், ஏரல் என்பன கொள்க.

சிதலும் எறும்பும் மூவறி வினவே பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே.

மூவறிவுயிராமாறு உணர்த்துதல் நுதலிற்று.

சிதலும் எறும்பும் மூவறிவின. அக்கிளைப் பிறப்புப் பிறவுமுள என்றவாறு. பிறவாவன அட்டை முதலாயின.

நண்டுந் தும்பியு நான்கறி வினவே பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே.