உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

நாலறிவுயிராமாறு உணர்த்துதல் நுதலிற்று.

183

நண்டுந் தும்பியுமென நாலறிவையுடைய; அக்கிளைப் பிறப்புப்

பிறவுமுள வென்றவாறு.

பிறவு மென்றதனான் ஞீமிறு. சுரும்பென்பன கொள்க.

மாவும் புள்ளும் ஐயறி வினவே

பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே.

ஐயறிவுயிராமாறு உணர்த்துதல் நுதலிற்று.

நாற்கால் விலங்கும் புள்ளும் ஐயறிவுடைய. அக்கிளைப் பிறப்புப் பிறவும் உள என்றவாறு.

பிறவாவன தவழ்வனவற்றுள் பாம்பு முதலாயினவும் நீருள் வாழ்வனவற்றுள் மீனும் முதலையும் ஆமையும் முதலாயினவுங் கொள்ளப்படும்.

மக்க டாமே யாறறி வுயிரே

பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே.

ஆறறிவுயிர் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

மக்கள் ஆறறிவுயிர் எனப்படுவர்; அக்கிளைப் பிறப்புப் பிறவுமுள என்றவாறு.

பிறவாவது தேவர் அசுரர் இயக்கர் முதலாயினார்.

சமணர் கூறுவது போன்று தொல்காப்பியரும் ஆறுவகை உயிர்களைக் கூறுகிறபடியினாலே தொல்காப்பியர் சமணர் என்று கருதப்படுகிறார்.