உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

இவற்றை ஆராய்வோம்:

பண்டைக் காலத்திலே, மதுரையைச் சூழ்ந்துள்ள எட்டு மலைகளிற் சமண முனிவர் எண்ணிறந்தோர் தவஞ்செய்திருந்தனர் என்பது சைவ சமய நூல்களினாலும், சமணசமய நூல்களினாலும் இந்த மலைகளில் உள்ள குகைகளில் காணப்படும் கல்வெட்டுகளாலும் பிற சான்றுகளாலும் தெரியவருகிறது. இந்த எட்டு மலைகளில் யானைமலை நாகமலை என்பவயுைம் சேர்ந்தவை. யானை தன் முன்னங்கால்களை நீட்டிப் படுத்திருப்பதுபோன்று காணப்படுவ தாலும், பாம்பு போன்று காணப் படுவதாலும் இந்த மலைகளுக்கு முறையே யானைமலை, நாகமலை எனப் பெயர் அமைந்தன போலும். இந்த மலைகளிலும் பண்டைக் காலத்தில் சமண முனிவர் தங்கித் தவஞ்செய்து வந்தனர் என்பதற்குச் சான்றுகளை இந்நூல் 10-ஆம் அதிகாரத்தில் கூறினோம். இந்த மலைகள் நாகமும், யானையும் போன்று காணப்படுவதாலும் இம்மலைகளில் சமண முனிவர் இருந்தமையாலும் இந்துக்கள், சமணர் மேல் பழிசுமத்தும் நோக்கத்துடன், பாம்பு யானையை விழுங்குவது போன்று சமணர் மந்திரசாலம் செய்தார்கள் என்று கதை கட்டினார்கள் போலும். திருஞான சம்பந்தர் தம் தேவாரத்தில், யானை மாமலை யாதியாய இடங்களில் சமண முனிவர் இருந்தனர் என்று கூறியுள்ளார். ஆனால் அவர் பாம்பு யானையை விழுங்கும்படி சமணர் செய்து காட்டியதாக சொல்லப்படும் கதையைக் கூறவில்லை. அவர் காலத்தில் இந்தக் கதை வழங்கப்பட வில்லை போலும். அக்காலத்தில் இக்கதை வழங்கியிருந்தால், ஞான சம்பந்தர் இச்செய்தியையுங் கூறியிருப்பா ரன்றோ? எனவே, சம்பந்தர் காலத்தில், கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வழங்காத இக்கதை ஒட்டக் கூத்தர் காலத்தில் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டில்) வழங்கி வந்ததாகத் தெரிகிறது. (இந்த மலைகளைப் பற்றிய ஏனைய செய்திகளைச் சமணத் திருப்பதிகள்' என்னும் அதிகாரத்தில் கூறியுள்ளோம்.)

இனி, சமணர் ஏழுகடல்களை அழைத்ததாகச் சொல்லப்படும் செய்தியை ஆராய்வோம். மதுரைக்கு அருகிலே மேட்டுப்பட்டி என்னும் கிராமத்துக்கு அருகில் சித்தர்மலை என்னும் ஒரு மலையுண்டு. கோடைக்கானல் ரோட்டு அம்மைய நாயகனூர் இரயில் நிலையத்தி லிருந்து தென்மேற்கே பதின்மூன்று மைல் சென்றால் இக்கிராமத்தை யடையலாம். மேட்டுப்பட்டியில் உள்ள இந்தச் சித்தர்மலையில் சமண முனிவர் இருந்த குகைகளும் கற்பாறையில் அமைக்கப்பட்ட கற் படுக்கைகளும் இன்றும் காணப்படுகின்றன. அன்றியும் இங்கு ஏழுகடல்