உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. ஆருகத சமயத்துப் பெண்பால் துறவிகள்

ஆருகத சமயத்துப் பெண்பால் துறவிகளுக்கு கந்தி அல்லது கௌந்தி என்று பெயர் வழங்கப்பட்டது. என்னை?

"நந்திய பிண்டி வாமன் நன்னெறி வழாது நோற்பாள் கந்தியே அவ்வை அம்மை கன்னியே கௌந்தி என்ப, என்று சூடாமணி நிகண்டு கூறுகிறது. பிங்கல நிகண்டு, “பைம்மையும் கௌந்தியும் அருந்தவப் பெண் பெயர். என்றும், திவாகர நிகண்டு,

66

66

“பைம்மையும் கௌந்தியும் அருந்தவப் பெண் பெயர்.

99

99

என்றும் கூறுகின்றன. சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிற கௌந்தி யடிகள், சமண சமயத்துப் பெண்பால் துறவியாவர். மைசூரில் உள்ளதும் சமணரின் முக்கியத் திருப்பதிகளுள் ஒன்றுமான சமணர் வெள்ளைக் குளம் என்னும் பொருள் உள்ள சிரவண பௌகொள என்னும் இடத்தில் சமணசமயச் சார்பான சாசனங்கள் பல காணப்படுகின்றன. அந்தச் சாசனங்களில் சில கந்தியார்களின் பெயர்கள் கூறப்படுகின்றன. அவை வருமாறு:- நாகமதி கந்தியார், சசிமதி கந்தியார், நவிலூர் சங்கம் ஆஜி கணத்தைச் சேர்ந்த ராஜ்ஞிமதி கந்தியார், அநந்தமதி கந்தியார், ஸ்ரீமதி கந்தியார், மாங்கப்பெ கந்தியார் முதலியன.

சமணசமயப் பெண்பால் துறவிகளுக்கு ஆர்யாங்கனை என்னும் பெயரும் உண்டு. ஆர்யாங்கனைகன் அல்லது கந்தியார்கள் ஒழுக வேண்டிய சில முறைகளைப் பற்றி நீலகேசி உரையில் இவ்வாறு கூறப்படுகிறது:- "ரிஷிகள் (சமண முனிவர்) பிக்ஷைக்குப் புக்க கிருஹத்து ஆர்யாங்கனையைக் காணின் முட்டுப்பாடு கொண்டு மீள்க வென்றும், அவர்களும் ரிஷிகளைக் கண்ட கிருஹத்துப் பிக்ஷை கொள்ளாது மீள்க வென்றும், ரிஷிகள் இருக்கும் பள்ளியுள் ஆர்யாங் கனைகள் இருக்கப் பெறாரென்றும், ஆர்யாங்களைகள் இருக்கும் பள்ளியுள் ரிஷிகள் இருக்கப் பெறாரென்றும், ரிஷிகள் ரிஷிகள் பாற்றுறக்க, ஆர்யாங்கனைகள்ஆர்யாங்கனைகள் பாற்றுறக்க