உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

வென்றும், அத்யயனமும் இவ்வாறே செய்கவென்றும் விதிக்கின்ற

பரமாகம

முடையார்

அனுஷ்டிக்கின்றார்கள்.'

அவ்வாறே

இன்றுகாறும்

(நீலகேசி: மொக்கல: 57. உரை.)

குரத்தி என்னும் பெயரும் சமணசமயப் பெண்பால் துறவிகளுக்கு வழங்கி வந்தது. குரத்தி என்னும் பெயர் குரு என்பதன் பெண்பாற் பெயர் ஆகும். பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், சாசனங்கள் முதலியவற்றில் குரத்தி என்னும் சொல் வழங்கப் பட்டுள்ளன.

66

“சாமி குரத்தி பெருமாட்டி ஆசாள் தலைவி ஐயை

நாமங் கவுந்தியும் பைம்மையும் ஆருகதத்துத் தவப்பெண்.

என்பது கயாதர நிகண்டு.

ஸ்ரீ மிழலூர்க் குரத்தியார். சிறிவிசையக் குரத்தியார், நால்கூர்க் குரத்திகள், இளநேச்சுரத்துக் குரத்திகள், அரிட்டநேமிக் குரத்திகள், திருப்பருத்திக் குரத்திகள், கூடற் குரத்தியார் முதலிய பெயர்கள் சாசனங்களில் காணப்படுகின்றன.

வடஆர்க்காடு மாவட்டம் வாலாஜாபேட்டைத் தாலுகா விளாப் பாக்கத்தில் உள்ள நாகநாதேசுவரர் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டுச் சாசனம், பட்டினிக் குரத்தி அடிகள் என்பவரைக் குறிப்பிடுகிறது. பட்டினிக் குரத்தி அடிகள் இவ்வூரில் சமணப் பெண்பள்ளியை (மடத்தை) நிறுவின செய்தி இச் சாசனத்தில் கூறப்படுகிறது:-

ஸ்வஸ்தி ஸ்ரீ மதுரை கொண்ட கோப்பர கேசரி வர்மர்க்கு யாண்டு முப்பத்தெட்டாவது. படுவூர்க் கோட்டத்துப் பெருந் திமிரிநாட்டு விளாப் பாக்கத்துத் திருப்பான் மலை அரிஷ்டநேமி படாரர் மாணாக்கியார் பட்டினி குரத்தி அடிகடேன் கண்ட கிணறு. இது இவ்வூர் இருபத்து நால்வரை இரக்ஷிப்பதாகவும், இம் மனையும், கிணறும் பெண்பள்ளி யாவதாகவும், இத் தர்மங் கெடுத்தார் கெங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்த பாவத்திற்படுவார். ஊர் பணிக்க எழுதினேன் இவ்வூர்க் கருமான் இலாடாச்சனேன்.

6

ஆர்யாங்கனைகள் என்றும் கௌந்திகள் என்றும் குரத்திகள் என்றும் கூறப்பட்ட சமணசமயப் பெண்பால் துறவிகள், தலையை மழித்து