உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

ரிக்ஷிகளாலும் தெய்வங்களாலும் மக்களை உண்டாக்கப்பட்டன என்று கூறுகின்றது.

201

மயக்குவதற்காக

திருமால் பெளத்த சமண மதங்களைப் போதித்தார் என்பதை நம்மாழ்வாருங் கூறுகின்றார்:

66

'கள்ளவேடத்தைக் கொண்டுபோய் புரம்புக்க வாறும் கலந்த சுரரை

உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்

வெள்ளநீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும் உள்ளமுள் குடைந்து என்னுயிரை உருக்கி யுண்ணுமே

இதற்குப் பன்னீராயிரப்படி உரை வருமாறு:-

66

"கள்ள வேடத்தை - வேதபாஹ்ய புத்தரூபமான க்ருத்திர வேஷத்தை, கொண்டு = கொண்டு, போய் = போய் புரம் = த்ரிபுரத் திலே, புக்க ஆறும் = புக்கபிரகாரமும், அசுரரை = அங்குத்தை, யசுரரை, கலந்து = உட்புக்குச் செறிந்து, உள்ளம் பேதம் = சித்த பேதத்தை, செய்திட்டு = பண்ணி, உயிர் = அவர்கள் பிராணன்களை, உண்ட = அபகரித்த, உபாயங்களும் = விரகுகளும்.

"

நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி, 5 ஆம் பத்து, 7 ஆம் திருமொழி, 5 ஆம் செய்யுளிலும் இச் செய்தி கூறப்படுகிறது:- “எய்தக் கூவுத லாவதே எனக்கு

எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று

கைதவங்கள் செய்யும் கருமேனியம்மானே.

இதற்கு ஈடு 36 ஆயிரப்படி வியாக்யானம் வருமாறு:

“கைதவங்கள் செய்யும்=கிருத்திரிமங்களைச் செய்யும். அஃதாவது - புத்த முனியாய் அவர்கள் நடுவே புக்கு நின்ற அவர்களுக்குண்டான வைதிக ஸ்ரத்தையைப் போக்கினபடி. வசனங்களாலும் யுக்திகளாலுங் கிருத்திரிமத்தைப் பண்ணி வைதிக ஸ்ரத்தையைப் போக்கி அவ்வள வினாலும் கேளாதார்க்கு வடிவைக் காட்டி வாள்மாளப் பண்ணினபடி (வாள்மாளப் பண்ணின படி=சவப்பிராயராகப் பண்ணினபடி, அஃதாவது கொன்றபடி) தன்னுடைய வார்த்தைகளாலே அவர்களைச் சவப்பிராயராக்கி ஒருவன் சிவன்) அம்புக்கு இலக்காம்படி பண்ணி வைத்தான்.