உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

சிவனும் திருமாலும் சேர்ந்து முப்புரத்தை (பௌத்த சமண மதத்தை) அழித்த செய்தியை வைணவ நூல்கள் கூறியதுபோலவே தேவாரம் முதலிய சைவ நூல்களும் கூறுகின்றன.

“நேசன் நீலக் குடிஅர னேஎனா

நீச ராய், நெடு மால்செய்த மாயத்தால்

ஈச னேர்சர மெய்ய எரிந்துபோய்

நாச மானார் திரிபுர நாதரே.'

(அப்பர் தேவாரம்)

கூர்மபுராணம் திரிபுரதகனம் உரைத்த அத்தி யாயத்தில், திருமால் புத்த முனிவராகவும், நாரதர் சமண முனிவராகவும் உருவம் எடுத்துச் சென்று அசுரர், அவுணர் என்பவர்களை மயக்கும் பொருட்டுப் பௌத்த சமண மதங்களைப் போதித்தார்கள் என்று கூறுகிறது:

“சாக்கிய குருவின் மாயன் ஆங்கவர் புரத்தில் சார்ந்து

99

கோக்களிற் றுரிவை போர்த்த கொன்றைவே ணியன்மேல் அன்பு நீக்கியவ் வசுரர் தம்மை நிகழ்த்துபுன் சமயந் தன்னில் ஆக்கிநல் இலிங்க பூசை யறிவொடும் அகற்றினானே. "ஆங்கண்மா ணாக்க ரோடு நாரத னணுகி யன்பிற் கோங்குறழ் முலையாள் பங்கன் பூசனை குறித்தி டாமல் தீங்கினைச் செய்யா நிற்கும் சமயத்தில் சென்று நாளும் வாங்குவில் அவுணர் நெஞ்சம்மருண்டிட மாயை செய்தான்.

இதே கருத்தைத் திருக்கூவப்புராணம், (திரிபுர தகனப் படலம்) கூறுகிறது:

“மறமொன்று கின்ற அரணங்கள் தம்மில்

வரும்அம்பு யக்கண் இறைவன்

திறமொன்று புத்த னருகன் றயங்கு

சினனென்ன வங்கண் அடையா

அறமென்று வஞ்ச மதிநூல் மருட்டி யறைகின்ற காலை யவுணர் நிறமொன்று பூதி மணியோ டிலிங்க

நிலைவிட்டு அகன்ற னரரோ.

இதில் திருமால், புத்தன் அருகன் சினன் என்னும் மூன்று உருவங்கொண்டு முப்புரத்திலிருந்த அவுணரிடம் சென்று பௌத்த