உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

31

துக்கம் முதலியவற்றையும் பிறத்தல், வாழ்தல், இறத்தல் முதலிய வற்றையும் புத்கலப் பொருள் கொடுக்கிறது. அஃதாவது, உயிர்கள் இவற்றை அடைவது புத்கலப் பொருளி னாலே தான்.

தர்மம், அதர்மம் என்பவை தர்மாஸ்திகாயம், அதர்மாஸ்தி காயம் என்றும் கூறப்படும். (இவற்றைப் புண்ணியம், பாவம் என்று கருதுவது கூடாது. சமண தத்துவக் கொள்கைப்படி, தர்மம், அதர்மம் என்பவை வேறு புண்ணிய பாவம் என்பவை வேறு.) தர்மம், அதர்மம் என்பவை நுண்ணிய அணுப்பொருளாக உள்ளன. இவை உயிர்கள் இயங்குவதற்கும் தங்கி நிற்பதற்கும் இடமாக உள்ளன. மீன்கள் நீந்துவதற்கும், ஓய்வு கொள்வதற்கும் நீர்நிலை (தண்ணீர்) எவ்வாறு உதவுகிறது அவ்வாறு, உயிர்கள் இயங்கு வதற்கும் தங்குவதற்கும் தர்ம அதர்மம் என்னும் அணுப் பொருள்கள் இடமாக உள்ளன. நடத்தல், ஓடுதல் முதலிய இயக்கங்கள் தர்மம் என்னும் அணுக்களின் உதவியினாலாகும். இருத்தல், நிற்றல், கிடத்தல் முதலியவை அதர்மம் என்னும் அணுக்களின் உதவியினால் ஆகும். தர்ம, அதர்மப் பொருள்கள் இல்லையானால் புத்கலங்களால் உண்டாகும் பலவகையான உடம்புகள் இயங்கவும் தங்கவும் முடியாது.

66

'தருமாத்தி காயம் தானெங்கும் உளதாய்ப்

பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமாய் அப்படித் தாகி அதன்மாத்தி காயமும்

எப்பொருள் களையும் நிறுத்தல் இயற்றும்

(மணிமேகலை 27 : 187-190)

எனவரும் மணிமேகலை அடிகளாலும் இதனை அறியலாம். தர்மம், அதர்மம் என்னும் இவை, ஆகாயம் பரந்துள்ள வரையில் நிறைந்து இருக்கின்றன.

காலம் என்பது, இமைத்தல், நொடித்தல் முதலிய சிறுகாலம் முதல் கற்பகாலம் முதலிய பெரிய கால அளவு ஆகும்.

“காலம் கணிகம் எனுங்குறு நிகழ்ச்சியும்

மேலும் கற்பத்தின்நெடு நிகழ்ச்சியும் ஆகும்.

(மணிமேகலை 27 : 191-192)

ஆகாயம் என்பது, சமண சமயக் கொள்கைப்படி ஐம்பூதங்களுள் ஒன்றன்று. தர்மம், அதர்மம், காலம், உயிர்கள், புத்கலங்கள் ஆகிய