உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

66

“செய்யும் வினையும் இருள்உண் பதுவும் தேனும் நறவும் ஊனும் களவும் பொய்யும் கொலையும் மறமும் தவிரப் பொய்தீர் அறநூல் செய்தார் தமதூர் கையும் முகமும் இதழும் விழியும்

காலும் நிறமும் போலும் கமலங் கொய்யும் மடவார் கண்வாய் அதரங் கோபங் கடியுந் தீபங் குடியே

49

இந்தப் பத்து விரதங்களோடு திசை விரதம் அனர்த்த தண்ட விரதம், போகோப போகப் பரிமாண விரதம் என்னும் மூன்று குண விரதங் களையும், நான்கு சிட்சா விரதங்களையும் சேர்த்து இல்லறத்தாரின் ஒழுக்கமாகக் கூறுவதும் உண்டு.

"பெரியகொலை பொய்களவு பிறர்மனையி லொருவல் பொருள்வரைதல் மத்தம்மது புலைசுணலின் நீங்கல் பெரியதிசை தண்டமிரு போசம்வரைந் தாடல் மரீஇயசிக்கை நான்குமிவை மனையறத்தார் சீலம்”

என்பது மேருமந்தர புராணச் செய்யுள் (பத்திர மித்திரன் அறங் கேள்விச் சருக்கம், 133). இதில் பின் இரண்டடிகளில் கூறப்பட்ட ஒழுக்கங்களை விளக்குவோம்.

திசைவரைதல் என்பது திசை விரதம். எட்டுத் திசைகளிலும் ஒரு வரையறை செய்து கொண்டு அந்த வரையறைக்கு அப்பால் எக் காரணத்தை முன்னிட்டும் போவதில்லை என்று விரதம் செய்து கொள்வது. இந்த விரதத்தைத் துறவிகள் கொள்ளக் கூடாது.

தண்டம் வரைதல் என்பது அனர்த்த தண்ட விரதம். இது நான்கு விதம். 1. பிறர்க்குத் தீங்கு நினையாதிருத்தல்; 2. அசட்டைத் தனத்தினால் பூச்சிகளைச் சாக வைக்காதிருத்தல்; அஃதாவது பால், எண்ணெய், நீர் முதலியவற்றை மூடி வைக்காதபடியால் ஈ, எறும்புகள் விழுந்து இறக்கின்றன. இவ்வாறு நேரிடாதபடி பார்த்துக் கொள்ளுதல்; 3. கத்தி முதலிய ஆயுதங்களினால் பிறருக்குத் துன்பம் ஏற்படுவதனால் அவ்வித ஆயுதங்களை வைத்துக் கொள்ளாமல், எவ்வளவு குறைக்க வேண்டுமோ அவ்வளவு குறைத்துக் கொள்வதோடு அவற்றால் பிறருக்குத் துன்பம் நேரிடாதபடி பார்த்துக் கொள்ளுதல்; 4. தன்னுடைய