உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

புழுக்களைக் கொன்றும் உயிர்க்கொலை களைச் செய்கிறார்கள். ஆகவே, கொல்லா விரதத்தை முதல் விரதமாகக் கொண்ட சமணர் தேன் உண்பது பாவம் என்று விலக்கி வைத்தார்கள். மருந்தைத் தேனுடன் கலந்து உண்ண வேண்டியிருந்தால், தேனை விலக்கிச் சர்க்கரைப் பாகுடன் கலந்து கொடுப்பது சமண மருத்துவரின் மரபு.

சமணர் முக்கியமாகக் கொள்ள வேண்டிய மற்றொரு விரதம் இரவு உண்ணாமை என்பது. சூரியன் மறைந்த பிறகு உணவு கொள்ளக் கூடாது என்பது சமணரின் முக்கியக் கொள்கை. ஆகையால் இரவு வருவதற்கு முன்பே உணவு கொள்வர். இந்த விரதத்தோடு ஆசாரியர் முதலிய பெரியோரை வணங்குதலும் ஒரு கொள்கையாகும். இந்தப் பத்து ஒழுக்கங்களும் இல்லறத் தார்க்கு இன்றியமையாதன. கீழ்கண்ட செய்யுள் இப் பத்து ஒழுக்கங்களையும் கூறுகிறது:

"கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, காமத்தை

ஒல்லாமை, ஒண்பொருளை வரைதலோ டிவைபிறவும் பொல்லாத புலைசுதேன்கள் இருளுண்ணா நிலைமையொடு நல்லாரைப் பணிவதுவும் நாமுறையே பயனுரைப்பாம்”

திருக்கலம்பகம் என்னும் சமணசமய நூலிலும் சாவக நோன்பிகளின் இப்பத்து ஒழுக்கங்கள் கூறப்படுகின்றன :

"விரையார் மலர்மிசை வருவார் திருவறம்

விழைவார், கொலையினை விழையார்; பொய் உரையார்; கள்வினை ஒழுகார்; பிறர்மனை

உவவார்; மிகுபொருள் உவவார்; வெம் சுரையால் உணர்வினை அழியார்; அழிதசை துவ்வார்; விடமென வெவ்வாறும்

புரையார்; நறவினை நுகரார்; இரவுணல் புகழார்; குரவரை இகழாரே

இச்செய்யுள்களில் ஆருகத இல்லறத்தார் கடைப்பிடித் தொழுக வேண்டிய பத்து ஒழுக்கங்களும் கூறப்பட்டுள்ளன. தீபங்குடி என்னும் ஊரினராகிய சயங்கொண்டார் என்னும் சமணப் புலவரைச் சோழ அரசன், நுமதூர்யாது என்று கேட்டபோது அப்புலவர் பாடியது ஒரு செய்யுளிலும் சமண இல்லறத்தாரின் ஒழுக்கங்கள் கூறப்பட்டுள்ளன. அச்செய்யுள் இது.