உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-8

பௌத்தர்களும் ஜைனர்களும் பிராகிருத மொழியைக் கற்றவர்கள் என்பதைத் தேவாரத்தில் திருஞான சம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் கூறியுள்ளார்கள்.

66

ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமாப் பாகதத்தோ டிரைத்துரைத்த சனங்கள் வெட்குறுபக்கமா மாகதக்கரி போற்றிரிந்து புரிந்துநின்றுணு மாசுசேர் ஆகதர்க்கெளி யேனலேன்திரு வாலவாயரன் நிற்கவே

(2)

இதில், சங்கத பங்கதம் என்பது சம்ஸ்கிருத மொழியை பாகதம் என்பது பிராகிருத மொழியை.

சுந்தரமூர்த்தி சுவாமிகள், பௌத்த ஜைனர்கள் பிராகிருத மொழியை ஓதியதை ஏளனம் செய்து காட்டுகிறார். அச்செய்யுள்:

66

நமணநந்தியும் கருமவீரனும் தருமசேனனும் என்றிவர் குமணமாமலைக் குன்றுபோல் நின்று தங்கள் கூறையொன்றின்றியே

(9)

ஞமண ஞாஞண ஞாணஞோணமென் றோதியாரையு நாணிலா அமணராற் பழிப் புடையரோநமக் கடிகளாகிய அடிகளே சம்ஸ்கிருத மொழியில் க்ஷகர, ஸகர, ரகரங்கள் அதிகமாகப் பயின்று வருவதுபோல பிராகிருத மொழிகளிலே ஙகரம், ஞகரம், ணகரம், மகரங்கள் அதிகமாகப் பயின்று வருகின்றன. மாகதி, அர்த்தமாகதி மொழிகளைப் பயின்றவர்கள் அல்லது பயிலக் கேட்டவர்கள் இந்த உண்மையை நன்கறிவார்கள். இதைத்தான் மேலே காட்டிய தேவாரத்தில், சுந்தரமூர்த்திகள் “ஞமண ஞாஞண் ஞாண ஞோணம்” என்று ஏளனம் செய்து காட்டுகிறார். இதனால், சம்பந்தர், சுந்தரர் காலத்திலும் அஃதாவது 7ஆவது 8ஆவது நூற்றாண்டுகளிலும் பௌத்த ஜைனர் பிராகிருத நூல்களை ஓதிவந்தார்கள் என்பது தெரிகிறது.

இடைக்காலத்திலே, பௌத்த ஜைனர்கள், தமிழ்ச் சொற்களையும் வடமொழிச் சொற்களையும் விரவிக் கலந்து மணிப் பிரவாளம் என்னும் புதியதோர் உரைநடையை உண்டாக்கினார்கள். மணிப் பிரவாள நடையில் எழுதப்பட்ட பௌத்த ஜைன நூல்கள் இடைக் காலத்திலே பயிலப் பட்டன. பௌத்த மதம் தமிழ்நாட்டிலே முழுவதும் மறைந்து போய் விட்டபடியால், பௌத்தச் சார்பான மணிப்பிரவாள நடை நூல்களும் அழிந்துவிட்டன. ஆனால், பௌத்தர் இயற்றிய