உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

என்னும் கலித்துறைச் செய்யுளினாலும் அறியலாம்.

"

133

இவரது காலம், இவரை ஆதரித்த வீரசோழன் காலமாகும். வீர சோழன் என்பவன் வீரராசேந்திரன் என்னும் பெயருடன், கி.பி. 1063 முதல் 1070 வரையில் சோழநாட்டை அரசாண்டவன்; ‘வீரசோள கரிகால சோள ஸ்ரீ வீரராஜேந்திர தேவ ராஜகேசரி வன்ம பெருமானடிகள்' என்று சாசனத்தில் புகழப்படுபவன்; 'எல்லா உலகு மேவிய வெண்குடைச் செம்பியன் வீரராசேந்திரன்' என்று புத்தமித்திரனாரால் வீரசோழியத் தில் புகழப்படுபவன். கிருஷ்ணை, துங்கபத்திரை என்னும் இரண்டு ஆறுகள் ஒன்று கூடுகின்ற ‘கூடல் சங்கமம்' என்னும் இடத்தில் இரண்டாம் சோமேஸ்வரன், விக்கிரமாதித்தன் என்னும் இரண்டு சாளுக்கிய அரசர்கள் அரசுரிமைக்காகச் செய்த போரில், இந்தச் சோழன், விக்கிரமாதித்தன் பக்கம் சேர்ந்து போர்செய்து, சோமேஸ் வரனை முறியடித்து, விக்கிரமாதித்தனை அரசுகட்டில் ஏறச்செய்தான். அன்றியும், அவனுக்குத் தன்மகளை மணஞ்செய்து கொடுத்தான். வனால் ஆதரிக்கப்பட்ட புத்தமித்திரனாரும் இவன் காலத்தில், அஃதாவது கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் இருந்தவராவர்.

'அணி' என்னும் அலங்கார இலக்கணத்தை, தண்டியாசிரி யரைப் பின்பற்றிச் சொன்னதாக இவர் தமது வீர சோழியத்தில் கூறுவதால், இவர் தண்டியாசிரியருக்குப் பிற்பட்டவராதல் வேண்டும்.

சிவபெருமானிடத்தில் அகத்திய முனிவர் தமிழ்மொழியைக் கற்றார் என்று ஒரு கொள்கை சைவர்களுக்குள் உண்டு. புத்தமித்திரனார், பௌத்த முனிவராகிய அவலோகிதீஸ்வரரிடத்தில் அகத்திய முனிவர் தமிழ் பயின்றதாகக் கூறுகின்றார். இதனை, 'ஆயுங்குணத்தவ லோகிதன்' என்னும் வீரசோழிய அவையடக்கச் செய்யுளால் அறியலாம். (இணைப்பு காண்க.)

புத்தமித்திரனார் வீரசோழியத்தைத் தவிர வேறு நூல் யாதேனும் செய்திருக்கின்றாரா என்பது தெரியவில்லை. இவர் இருந்த சோழ நாட்டிலேயே இவர் பெயரைக் கொண்ட பௌத்த பிக்கு ஒருவர் இருந்த தாகவும், அவர் இலங்கை சென்று அநுராதபுரத்தில் தங்கியிருந்த தாகவும், இலங்கையில் அவருக்குச் 'சோழதேரர்' என்ற பெயர் வழங்கியதாகவும் பௌத்த நூல்களால் அறிகின்றோம். ஆனால், அந்தப் புத்தமித்திரர் இவரின் வேறானவர் என்று தெரிகின்றது.