உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8

19. பெருந்தேவனார்

'பெருந்தேவனார்' என்னும் பெயருடைய தமிழாசிரியர் சிலர், பண்டைக் காலத்தில் இருந்தனர். கடைச்சங்க காலத்தில் இருந்த பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவரும், பிற்காலத் திலிருந்த பாரத வெண்பாப் பாடிய பெருந்தேவனாரும் இவரின் வேறானவர்கள். இந்தப் பெருந்தேவனார் பௌத்தர்: புத்தமித்திரனாரின் மாணவர்; புத்திர மித்திரனார் இயற்றிய வீரசோழியம் என்னும் இலக்கண நூலின் உரையாசிரியர். இதனை,

'தடமார் தருபொழிற் பொன்பற்றி காவலன் தான்மொழிந்த படிவீர சோழியக் காரிகை நூற்றெண் பஃதொடொன்றின் திடமார் பொழிப்புரை யைப்பெருந் தேவன் செகம்பழிச்சக் கடனாக வேநவின் றான்றமிழ் காதலிற் கற்பவர்க்கே’

என்னும் வீரசோழிய உரைப்பாயிரச் செய்யுளால் அறியலாம். வீரசோழிய நூலின் சிறப்பை அதிகப்படுத்துவது இவரது உரையே என்று கூறுவது மிகையாகாது. இவர் எழுதிய உரை தமிழாராய்ச்சியாளருக்கும், தமிழ்நாட்டுச் சரித்திர ஆராய்ச்சி யாளருக்கும் மிக்க உதவியாக இருக்கின்றது.

இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ள புத்தரைப் போற்றும் செய்யுள் களில் பெரும்பான்மையும் இவர் உரையில் மேற்கோள் காட்டப்பட்ட செய்யுள்களே. (இணைப்பு காண்க.)

இவர் தமது உரையில் நியாய சூடாமணி, புதியாநுட்பம், வச்சத் தொள்ளாயிரம், உதயணன் கதை, கலிவிருத்தம், எலி விருத்தம், நரிவிருத்தம் என்றும் நூல்களைக் குறிப்பிட்டிருக்கின்றனர். அன்றியும் குண்டலகேசி, பாரதவெண்பா, யாப்பருங்கலம் முதலிய நூல்களின்றும் செய்யுள்களை மேற்கோள்களாக எடுத்தாண்டிருக்கின்றார்.

இவரது வரலாறு வேறொன்றும் தெரியவில்லை. இவரது காலம் புத்தமித்திரனாரும் வீரராசேந்திர சோழனும் வாழ்ந்திருந்த, கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும்.

20. தீபங்கர தேரர்

இவர் சோழநாட்டினைச் சேர்ந்தவர், ஆனதுபற்றிச் 'சோளிய தீபங்கரர்' என்று இவர் வழங்கப்படுகின்றார். புத்தப்பிரிய தேரர் என்றும் வேறொரு பெயர் இவருக்கு உண்டு. இவர் இலங்கைக்குச் சென்று,