உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-8

இச்செய்யுளைப் பாடிய அநிருத்தரும் ஷ நூல்களை இயற்றிய அநுருத்தரும் ஒருவர் தாமோ என்பது தெரியவில்லை.

22. புத்தமித்திரர், மகாகாசபர் (சோழ தேரர்கள்)

6

இவ்விருவரையும் சோழ தேரர்கள் என்று இலங்கை நூல்கள் கூறுகின்றன. சோழநாட்டவராகிய இவர்கள் இலங்கைக்குச் சென்று ஆங்கு வாழ்ந்து வந்தனர் போலும். இவர்கள் வேண்டு கோளின்படி "உத்தோதயம்’, ‘நாபரூபப் பரிச்சேதம்' என்னும் நூல்கள் இயற்றப் பட்டன. நாமரூபப் பரிச்சேதம் இயற்றிய அநிருத்தர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இருந்தவர்; ஆதலால், இவர்களும் அக்காலத்தவராவர். இவர்களைப் பற்றிய வேறு வரலாறுகள் தெரியவில்லை. இந்தப் புத்தமித்திரர், வீரசோழியம் இயற்றிய புத்தமித்திரரின் வேறானவர். 23. ஆனந்த தேரர்? - (1245)

இவர் காஞ்சீபுரத்தில் இருந்தவர். பௌத்தமத நூல்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர். பர்மா தேசத்தவரான சத்தம்ம ஜோதி பாலர் என்னும் சிறப்புப் பெயரைக் கொண்ட சாபதர் என்பவர் இவரை இலங்கையி லிருந்து (பர்மா) அரிமர்த்தனபுரத்துக்கு அழைத்துச் சென்றார் என்று 'சாசன வம்சம்' என்னும் நூல் கூறு கின்றது. பர்மா தேசத்தை அரசாண்ட நரபதி ஜயசூரன் என்னும் அரசன் இவருக்கு யானை ஒன்றைப் பரிசாக அளித்தான் என்றும், அந்த யானையை இவர் காஞ்சீபுரத்திலிருந்த தமது உறவினருக்கு அனுப்பினார் என்றும் கல்யாணி நகரத்துக் கல்வெட்டுச் சாசனம் கூறுகின்றது. இவர் தமக்குக் கிடைத்த யானையைத் தமது உறவினருக்கு அளித்தார் என்று கூறுகிறபடியால், யானையைக் காப்பாற்றக்கூடிய பெருஞ்செல்வத்தை யுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தோன்றுகின்றது. இவர் ஐம்பது ஆண்டு பர்மா தேசத்தில் பௌத்தமத குருவாக இருந்து, பின்னர்க் கி.பி. 1245இல் காலமானார் என்று ஷ கல்வெட்டுச் சாசனம் கூறுகின்றது. இவரது வரலாறு வேறொன்றும் தெரியவில்லை.

24. தம்மகீர்த்தி

6

இவர் 'தம்பராட்டா’ என்னும் பாண்டிய மண்டலத்தைச் சேர்ந்தவர். (தாமிரவர்ணி பாயும் பாண்டிய நாட்டினைத் தம் பராட்டா என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன.) கல்வி அறிவு ஒழுக்கங்களினால் சிறந்தவர். இவரது மேன்மையைக் கேள்வி யுற்று, பராக்கிரம பாகு