உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

137

(இரண்டாமவன்) என்னும் இலங்கை மன்னன் இவரைத் தன்னிடம் வணக்கமாக வரவழைத்துக் கொண்டான். அன்றியும், சோழநாட்டி லிருந்த பௌத்தப் பிக்கு களையும் இவன் இலங்கைக்கு வரவழைத்து, ஒரு பெரிய பௌத்த மகாநாடு நடத்தினான். இந்த அரசன் மற்றப் பிக்ஷுக்களைவிடத் தம்ம கீர்த்தியிடத்தில் தனிப்பட்ட அன்பும் மரியாதையும் கொண்டிருந்தான். தாட்டா வம்சம் என்னும் நூலினை இவர் பாலி மொழியில் இயற்றியதாகக் கூறுவர். இந்த நூலை வேறொருவர் இயற்றியதாகச் சிலர் கூறுகின்றனர். இலங்கையின் வரலாற்றினைக் கூறும் மகாவம்சம் என்னும் நூலின் பிற்பகுதி யாகிய சூலவம்சம் என்னும் நூல் (மகாசேனன் என்னும் அரசன் காலமுதல் பராக்கிரமபாகு இரண்டாமவன் காலம் வரையில்) இவர் இயற்றியதாகக் கருதப்படுகின்றது. இவரை ஆதரித்த பராக்கிரமபாகு இரண்டாமவன், இலங்கையைக் கி.பி. 1236 முதல் 1268 வரையில் அரசாண்டவன். கையால், இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டாகும்.

25. கவிராசராசர்

இவர் ஒரு பௌத்தப் புலவர். இவர் தமிழ்க்கவி இயற்றுவதில் தேர்ந்தவர் என இவரது பெயரினால் அறியப்படும். இவரது காலம் தெரியவில்லை. ஆயினும், கி.பி. பதினொன்றாம், அல்லது பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்தவராகக் கருதலாம். இவர் இயற்றிய நூலின் பெயர் தெரியவில்லை. 'வன்பசிக் கடும்புலிக் குடம்பளித் துடம்பின்மேல் வாளெறிந்த வாயினூடு பால்சுரந்து' என்னும் செய்யுளடியை மேற்கோள் காட்டி, 'இது கவிராசராசன் வாக்கு' என்று து தக்கயாகப்பரணி உரையாசிரியர் கூறியிருப்பதிலிருந்து, இப்பெயரை யுடைய புலவர் ஒருவர் இருந்தாரென்பது தெரிகின்றது. (377ஆம் தாழிசை உரை காண்க.)

26. காசப தேரர்

சோழ காசபர் என்றும் வழங்கப்படுகிறார். பாலி மொழியை யும் பௌத்த நூல்களையும் நன்கு கற்றவர். மோகவிச்சேதனீ, விமதி விச்சேதனீ, விமதி வினோதனீ, அநாகத வம்சம் என்னும் நூல்களை இவர் இயற்றியிருக்கிறார். இவர் டமிள (தமிழ்) தேசத்துச் சோழ நாட்டவர் என்று கந்தவம்சம், சாசனவம்ச தீபம் என்னும் நூல்கள் கூறுகின்றன. ஆகவே, இவர் சோழநாட்டைச் சேர்ந்த தமிழர் என்பது தெரிகின்றது. இவர் இயற்றிய மோக விச்சேதனீ என்னும் நூலிலே,