உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

அணியிலகு கமலமலர் அனையஎழில் அறிவனிணை அடிகள் தோழுவாம்!

13. எண்டிசையும் ஆகிஇருள் அகலநூறி

14.

15.

16.

எழுதளிர்கள் சோதி முழுதுலகம் நாறி வண்டிசைகள் பாடி மதுமலர்கள் வேய்ந்து

மழைமருவு போதி உழைநிழல்கொள் வாமன் வெண்டிரையின் மீது விரிகதிர்கள் காண

வெறிதழல் கொள் மேனி அறிவனெழில் மேவு புண்டரிக பாதம் நமசரணம் ஆகும்

எனமுனிவர் தீமை புணர்பிறவி காணார்!

கூர்ஆர் வளைஉகிர் வாள் எயிற்றுச் செங்கட்

169

கொலை உழுவை காய்பசியால் கூர்ந்த வெந்நோய் நீங்க

ஓர் ஆயிரங்கதிர்போல் வாள்விரிந்த மேனி

உளம்விரும்பிச் சென்றாங் கியைந்தனை நீ என்றால்

கார்ஆர் திரைமுளைத்த செம்பவளம் மேவும்

கடிமுகிழ்த் தண்சினைய காமருபூம் போதி ஏர்ஆர் முனிவரர்கள் வானவர்தங் கோவே!

எந்தாய்! அகோ! நின்னை ஏத்தாதார் யாரே! மிக்கதனங் களைமாரி மூன்றும் பெய்யும்

வெங்களிற்றை மிகுசிந்தா மணியை மேனி ஒக்கஅரிந் தொருகூற்றை இரண்டு கண்ணை

ஒளிதிகழும் திருமுடியை உடம்பில் ஊனை எக்கிவிழுங் குருதிதனை அரசு தன்னை

இன்னுயிர்போல் தேவியைஈன் றெடுத்த செல்வ மக்களைவந் திரந்தவர்க்கு மகிழ்ந்தே ஈயும்

வானவர்தாம் உறைந்தபதி மானா வூரே!

வான் ஆடும் பரியாயும் அண மாயும்

வனக்கேழற் களிறாயும் எண்காற் புள்மான் தானாயும் பணை எருமை ஒருத்த லாயும்

தடக்கை இளங் களிறாயும் சடங்க' மாயும் மீனாயும் முயலாயும் அன்ன மாயும்

மயிலாயும் பிறவாயும் வெல்லுஞ் சிங்க

1. சடங்கம் - ஊர்குருவி