உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

221

பிங்கலகேசி, அஞ்சனகேசி என்னும் நூல்கள் இப்போது கிடைக்கவில்லை. அழிந்து விட்டன போலும். இவை பௌத்த மத நூல்களா சமணமத நூல்களா என்பதும் தெரியவில்லை.

இப்போது நமக்குக் கிடைத்திருக்கிற பௌத்த மத நூல்கள் மணிமேகலை காவியமும் வீரசோழிய இலக்கணமும் ஆகும். விம்பசார காவியமும் குண்டலகேசியும் மறைந்து போயின என்பதை முன்னமே கூறினோம். திருப்பதிகம் என்னும் பௌத்த நூலும் மறைந்து விட்டது. புத்த ஜாதகக் கதைகள் தமிழில் செய்யுள் வடிவமாக இருந்து மறைந்து போயின என்று கருதுவதற்கு ஆதாரங்கள் உள்ளன. இவற்றைத் தவிர பௌத்த சமயத்தார் தமிழில் எழுதிய நூல்கள் இன்னின்னவை என்பது தெரியவில்லை. அவை எல்லாம் மறைந்து போயின.

சமண சமயத்தார் தமிழில் எழுதிய நூல்களில் மறைந்து போனவை பல. வளையாபதி காவியம், நாரத சரிதை. சாந்தி புராணம், ஜைன இராமாயணம், எலி விருத்தம், கிளிவிருத்தம் முதலிய நூல்கள் மறைந்து போயின.

இப்போதுள்ள சமணத் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடத் தக்கவை: மேருமந்தர புராணம். சீவக சிந்தாமணி. சூளாமணி, ஜீவசம்போதனை, நீலகேசி, நாலடியார், பழமொழி நானூறு, ஏலாதி, சிறுபஞ்சமூலம், அறநெறிச்சாரம், யசோதர காவியம், நரி விருத்தம், திருநூற்றந்தாதி, திருக்கலம்பகம் முதலியவை. இவையல்லாமல் வேறு சில சிற்றிலக்கியங்கள் ஏட்டுச் சுவடிகளாக இருக்கின்றன.

தமிழில் மணிப் பிரவான உடைநடையை முதன் முதலாக உண்டாக்கினவர்களும் பௌத்த-சமண சமயத்தார்களே. அவர்கள் தங்கள் மத நூல்களை வசனமாக எழுதுவதற்கு விரும்பினார்கள். அந்த வசன நூல்களில் பாலி, சூரசேணி என்னும் பிராகிருத மொழிச் சொற்களையும் கலந்து எழுதினார்கள். அந்த மொழிகளில், தமிழில் இல்லாத நான்கு எழுத்துகளும் நான்குவகை சகர எழுத்துகள் வகை டகர எழுத்துக்களும் நான்குவகை தகரங்களும் ஷ, க்ஷ, ஹ முதலிய எழுத்துகளும் இருந்த படியால் அவ்வெழுத்துக்களைத் தமிழ் எழுத்துக்களில் கலந்து எழுதுவதற்கு ஏற்றபடி கிரந்த எழுத்து ஒருவகை எழுத்தை உண்டாக்கினார்கள். கிரந்த எழுத்து சமஸ்கிரு பாஷை நூல்கள் எழுதுவதற்கும் பயன்பட்டது. பௌத்த-சமண