உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8

பள்ளிகளில் அழைத்து அவர்களுக்குக் கல்வி கற்பித்தார்கள். இதனால் தான் பாடசாலைகளுக்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர் ஏற்பட்டது. அந்தப் பெயர் இன்றளவும் நின்று வழங்குகிறது. (பள்ளி என்பது பௌத்தக் கோவிலுக்கும், பிக்குகள் இருக்கும் விகாரை என்னும் கட்டடத்துக்கும் பெயர்.) பள்ளியில் பாடசாலையை அமைத்துக் கல்வி கற்பித்தபடியால் பள்ளிக்கூடம் என்னும் பெயர் ஏற்பட்டது. பர்மா, இலங்கை முதலிய பௌத்த சமயம் உள்ள நாடுகளில் கல்வி கற்றவர் தொகை அதிகமாக இருக்கிறது என்று ஆங்கிலேயர் சென்ற நூற்றாண்டில் எழுதியுள்ள அறிக்கை கூறுகிறது. பௌத்த சமயம் அக்காலத்தில் தமிழ் நாட்டில் கல்வியைப் பரவச் செய்வதில் அதிகமாகப் பாடுபட்டிருக்கிறது. பௌத்த பிக்குகள் மற்றவருக்கு வாழ்த்துக் கூறும் போது 'அறிவு உண்டாவதாகுக' என்று வாழ்த்தி னார்கள் என்று மணிமேகலை காவியத்தினால் அறிகிறோம். (குறிப்பு: பௌத்த மதத்தைப் போலவே சமண மதமும் நாட்டுச் சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்து வந்தது என்பதை இங்குக் குறிப்பிட வேண்டும்.) பௌத்தப் பள்ளிகள் நாடெங்கும் இருந்தன. ஆகவே நாடெங்கும் பாட சாலைகள் இருந்தன.

இலக்கியப்பணி

கல்வியை வளர்த்த பௌத்தர்கள் தமிழில் பல நூல்களையும், காவியங்களையும் இயற்றினார்கள். அந்தச் சமயம் சிறப்படைந்திருந்த காலத்தில் பௌத்தநூல்கள் பல தமிழில் இருந்தன என்பதற்குச் சான்றுகள் உள்ளன. கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு, பௌத்தம் தமிழ் நாட்டில் வீழ்ச்சியடைந்து மறைந்து போன காலத்தில் அந்த நூல்கள் போற்றப்படவில்லை. சமயப் பகை காரணமாக பௌத்த நூல்கள் அழிக்கப்பட்டன. அழிந்து போனவை போக இப்போது முழுநூலாகக் கிடைத்திருப்பவை இரண்டு நூல்களே. அவை மணிமேகலை என்னும் காவியமும், வீர சோழியம் என்னும் இலக்கண நூலும் ஆகும்.

முழு நூலாகக் கிடைக்காமல் பெயர் மட்டும் கேட்கப்படுகிற சில பௌத்த நூல்கள் உள்ளன. அவையாவன: குண்டலகேசி காவியம்: பேர் போன இந்தக் குண்டலகேசி காவியம், சென்ற நூற்றாண்டிலே தான் மறைந்து போயிற்று. இந்த நூலில் இருந்து சில செய்யுட்கள் வேறு நூல்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. நீலகேசி என்னும் சமண