உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-8

மாதரங் பிதரங் ஹக்த்வா

ராஜானோ த்வே சலாத்தியே வெய்யக்க பஞ்சமங் ஹந்த்வா

அநீகோ யாதி பிராஹ்மனோ

தாயையும், தந்தையையும் குருமாராகிய அரசர்களையும் ஐந்து தடைகளையும் வென்ற பிராமணன் துக்கம் (நரகம்) சேராமல் போகிறான் (தம்மபதம் கிண்ணகவர்க்க-6) என்பது இதன் பொருள்.

கொலைகாரன் பிராமணனாவதா?

மேற்பார்வைக்குத் தாய் தந்தை அரசன் முதலியவர்களைக் கொன்ற மகாபாதகன் (நரகம் அடையாமல்) மோட்சம் அடைகிறான் என்று இதற்குப் பொருள் கூறத் தோன்றுகிறது. தாய், தகப்பன், அரசன் இவர்களைக் கொன்றவன் எப்படி பிராமணன் ஆவான்? அந்த மகாபாவி எப்படி மோட்சம் (வீடுபேறு) அடைவான்? உயிர்ப் பிராணிகளைக் கொல்லக்கூடாது என்று போதித்த புத்தர் பெருமான் தாய் தந்தையரைக் கொன்ற மகா பாதகன் நரகம் புகாமல் மோட்சம் அடைவான் என்று கூறுவாரா? இந்த வாசகங்களுக்கு உட் பொருள் உண்டு. அது சிறந்த உயர்ந்த தத்துவத்தைக் கொண்டது. அதனை விளக்குவோம்.

தாய் தந்தை என்பது நான், எனது (அகங்காரம், மமகாரம்) என்னும் ஆணவம், அரசன் என்பதன் பொருள், ஐம்பொறி (மெய், வாய், கண், மூக்கு, செவி) ஐம்புலன் (ஊறு, சுவை, ஒளி, மணம், ஓசை) என்பன. பிறவிச் சுழலுக்குக் காரணமாக இருக்கிற “நான்” “எனது” என்னும் ஆணவங்களாகிய தாய் தந்தையர்களை அழித்து (கொன்று ஐம்புலன்களையும் ஐம்பொறிகளையும் வென்ற (கொன்று) மனத்தை அடக்கி தவஞ் செய்கிறவன் பிராமணன் ஆகிறான். அவன் பிறப்பு இறப்பாகி துன்பங்களை அடையாமல் மோட்சம் (வீடுபேறு) அடைகிறான் என்பது இந்த வாசகங்களின் பொருளாகும். இதனை திருவள்ளுவரின்,

யான் எனது என்றுஞ் செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்.

சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என் றைந்தின்

வகை தெரிவான் கட்டே உலகு.

என்னும் திருக்குறள்கள் தெளிவாக விளக்குகின்றன.