உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 8.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - பௌத்தம்

235

இந்தத் தத்துவ உண்மைகளைத் தான் மேற்காட்டிய தம்மபத வாசகங்கள் கூறுகின்றன. எனவே, தாய் தந்தையரைக் கொல்ல வேண்டும் என்பது யான் எனது என்னும் ஆவனங்களை அழிக்க வேண்டும் என்ப தாகும். இரண்டு அரசர்களை கொல்லவேண்டும் என்பது ஐம்பொறி களையும் ஐம்புலன்களையும் அழிக்கவேண்டும் என்பதாகும்.

கருத்து கதையாயிற்று

இந்தப் பௌத்த மதத் தத்துவக்கருத்து, பிற் காலத்தில் ஒரு கதையாக உருவம் அடைந்து கடைசியில் திருவிளையாடற் புராணத்தில் சிவபெருமான் மாபாதகஞ் செய்த ஒரு பிராமணனுக்கு மோட்சம் கொடுத்தார் என்று கூறப்படுகிறது. தாய், தந்தையரைக் கொன்றதாகத் தம்மபத வாசகங் கூறுவதை திருவிளையாடற் புராணக்கதை தந்தையைக் கொன்ற தாயை மனைவியாக்கிக் கொண்டான் என்று கற்பித்துக் கூறுகிறது. பொறிபுலன்களாகிய அரசர்களைக் கொன்றதாகத் தம்மபதங் கூறுவதைத் திருவிளையாடற் புராணக்கதை அறவே விட்டுவிட்டது.

பார்ப்பன குலத்தில் பிறந்த ஒருவன் தன் தாயை மனைவி யாக்கிக் கொண்டு, தன் தந்தையை கொன்று போட்டு வேறு ஊருக்குச் செல்லும் வழியில் வேடவர்கள் இவனை அடித்து இவனிடமிருந்து பொருள்களையும், இவனுடன் இருந்த பார்ப்பனி யையும் கொண்டு போனார்கள் என்றும் பிறகு இவனை பிரமகத்தி தொடர்ந்து துன்பப் படுத்தியது என்று கடைசியில் இவன் மதுரையில் கடம்பவனத்துக்கு வந்து சொக்கப் பெருமான் திருவருளினால் பிரமகத்தி நீங்கப் பெற்று வீடுபேறு அடைந்தான் என்று பெரும்பற்றப் புலியூர் நம்பி திருவிளை யாடற் புராணம் கூறுகிறது. பெரும்பற்றப் புலியூர் நம்பி கற்பித்துக் கூறிய இந்தக் கதைக்குப் பரஞ்சோதி முனிவர் மேலும் சில கற்பனை களைக் கற்பிக்கிறார். நம்பி அந்த மாபாதகஞ் செய்த பிராமணன் எந்த ஊரினவன் என்று கூறவில்லை. பரஞ்சோதியார் அந்த பிராமணன் அவந்தி நகரத்தில் இருந்தவன் என்றும், குலோத்துங்க பாண்டியனின் ஆட்சி காலத்தில் அந்தப் பிராமணன் மதுரைக்கு வந்தான் என்றும் அவனுடைய மாபாதகத்தைச் சொக்கப் பெருமாள் போக்கி மோட்சம் அளித்தார் என்றும் கூறியுள்ளார். பழைய காலத்தில் தம்மபதத்தில் கூறப்பட்ட இந்தப் பௌத்தமதத் தத்துவம், பிற்காலத்தில் சைவ சமயத்தில் ஒரு கதையாகக் கற்பிக்கப்பட்டுத் திருவிளையாடற் புராணத்தில் புகுத்தப் பட்டிருப் பதைக் காண்கிறோம். அந்தப் பௌத்த மதத் தத்துவம்